எடப்பாடி பழனிசாமி அணியில் யார்-யாரெல்லாம் சிலீப்பர் செல்கள்?

எடப்பாடி பழனிசாமி அணியில் யார்-யாரெல்லாம் சிலீப்பர் செல்கள்?

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 134 பேரில் 113 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், 21 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் உள்ளனர். தினகரனை ஆதரிக்கும் 21 எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் கட்சி விதிகளை மீறி விட்டதாக கூறி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து சட்ட சபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின்பலம் 116 ஆக குறைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். கட்சியை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத் துடன் அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.’ அவர்கள் அடிக்கடி “எங்களுக்கு ஆதரவு தெரி விக்கும் 8 அமைச்சர்கள், 17 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அணியில்…

Read More

சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியம் அளிக்கின்றன -கருணாஸ் எம்.எல்.ஏ

சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியம் அளிக்கின்றன -கருணாஸ் எம்.எல்.ஏ

தலைமை செயலகத்தில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியம் அளிக்கின்றன. பரோலில் உள்ள பேரறிவாளனுக்கே அரசியல்வாதிகளை பார்க்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சசிகலா பரோலுக்காக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில், அரசியல் சதி உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Read More

திடீரென உதகை வந்து அவசரமாக சென்னை திரும்பிய ஓபிஎஸ்: பேரன், பேத்தியைக் காண வந்ததாக விளக்கம்

திடீரென உதகை வந்து அவசரமாக சென்னை திரும்பிய ஓபிஎஸ்: பேரன், பேத்தியைக் காண வந்ததாக விளக்கம்

நான் எனது பேரன் மற்றும் பேத்தியைக் காணவே உதகை வந்தேன் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென உதகை வந்து, அவசரமாக சென்னை திரும்பினார். உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் தங்கினார். ஞாயிற்றுக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் கட்சியினரை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி காண முற்பட்ட போது எந்த கருத்தையும் தெரிவிக்காமல் சென்றார். ”நான் எனது பேரன் மற்றும் பேத்தியை காண வந்தேன்” என்று மட்டும் கூறி விட்டு கிளம்பிச் சென்று விட்டார்.

Read More

மருத்துவமனை செல்ல ஜெயலலிதா காரை பயன்படுத்தினார்: கணவர் நடராஜனை பார்த்ததும் கண்கலங்கிய சசிகலா – சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

மருத்துவமனை செல்ல ஜெயலலிதா காரை பயன்படுத்தினார்: கணவர் நடராஜனை பார்த்ததும் கண்கலங்கிய சசிகலா – சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

சென்னை பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது கணவர் நடராஜனை பார்த்ததும் சசிகலா கண் கலங்கினார். பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தனது கணவர் நடராஜன், ஆபத்தான நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரைப் பார்க்க பரோலில் நேற்று முன்தினம் சென்னை வந்தார். தி.நகரில் உள்ள தனது அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருக்கும் சசிகலாவை, திவாகரன் மகன் ஜெய்ஆனந்த், இளவரசியின் மகன் விவேக், சசிகலாவின் வழக்கறிஞர் அசோகன் ஆகியோர் நேற்று சந்தித்துப்…

Read More

மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பு: வைகோ கண்டனம்

மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பு: வைகோ கண்டனம்

மத்திய அரசுப் பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர்களின் விருப்பத்துக்கு மாறாக ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளை நீக்கிவிட்டு, சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அடுத்த கல்வி ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற அயல் மொழிகளை மூன்றாவது மொழியாக அனுமதிக்கக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவுறுத்தி இருக்கிறது. மாணவர்கள் விரும்பினால் அந்நிய மொழிகளை நான்காவது, ஐந்தாவது மொழியாகக் கற்றுக்கொள்ளட்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி பாடத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்போது, இந்தி,…

Read More