ஜெயலலிதா கைரேகை சர்ச்சை டாக்டரை பதவி நீக்கக் கோரும் வழக்கு: அக்.9-ல் உத்தரவு

ஜெயலலிதா கைரேகை சர்ச்சை டாக்டரை பதவி நீக்கக் கோரும் வழக்கு: அக்.9-ல் உத்தரவு

ஜெயலலிதாவின் கைரேகை குறித்து சான்றளித்த மருத்துவர் பாலாஜியை, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலராக நியமித்ததை எதிர்த்து பாடம் நாராயணன் தொடர்ந்த வழக்கு குறித்த உத்தரவு வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தேர்தல் முறைகேடு காரணமாக நிறுத்தப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி மற்றும் உறுப்பினர் உயிரிழந்த திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நேரத்தில் நடந்தது. ஜெயலலிதாவை யாரும் பார்க்க இயலாத நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கிய ஒரு படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்தும் மற்றொரு…

Read More

ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணமாக பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணமாக பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமீபத்தில் கடலூரைச் சேர்த்த வழக்கறிஞர் ஏ.கே.வேலன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்களில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து எந்த விவரமும் வெளியிடவில்லை. ஆளுநர் கூட அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அரசின் முதன்மை பொறுப்பில் உள்ளவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடவேண்டும். அப்போலோ மருத்துவமனை அனைத்தையும் மறைத்து விட்டது. எனவே இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ்…

Read More

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அமைச்சர் தலைமை ஏற்பதா?- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்லூர் ராஜூ

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அமைச்சர் தலைமை ஏற்பதா?- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்லூர் ராஜூ

மதுரையில் ஆர்எஸ்எஸ் பேரணியைத் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகள் காற்றில் பறக்க விடப்படுவதாகவும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி அனுமதியளிக்கக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர்கள், ”முந்தைய காலங்களில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஆர்எஸ்எஸ் விழா ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்ட பிறகே அனுமதி அளிப்பார். ஆனால் இப்போது எந்த விதிமுறைகளும் இல்லாமல் அனுமதி அளிக்கப்படுகிறது. அம்மா வழியில் செயல்படுவதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி அரசு, இந்தப் பேரணியை அனுமதித்து அவருக்கு…

Read More