ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனை

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனை

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டார். தினத்தந்திக்கு ஏற்கனவே அளித்த பேட்டியில், ரஜினிகாந்துக்கு போட்டியாக நான் அரசியலுக்கு வரவில்லை. புதிய கட்சி பெயர், கொடி, சின்னம் உருவாக்கும் பணிகளை தொடங்கிவிட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா? என்ற கேள்விக்கு அதுதான் நியாயமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது என பதிலளித்து இருந்தார். அரசியல் குறித்து பேசிவரும் நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடப்பதாக…

Read More

ம.நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் பொருத்தப்பட்டது

ம.நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் பொருத்தப்பட்டது

சசிகலாவின் கணவரும் ‘புதிய பார்வை’ இதழின் ஆசிரியருமான நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனைக்குச் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ”நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா. இவரின் கணவர் ம.நடராஜன் (74). இவர் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 10-ம் தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. அத்துடன் அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல்…

Read More

திருமணமான 15 நாளிலேயே காவலர் டெங்குவால் பலி

திருமணமான 15 நாளிலேயே காவலர் டெங்குவால் பலி

டெங்கு காய்ச்சல் பாதிப்பால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலர் நேற்று உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் உள்ள உலக்குடியைச் சேர்ந்தவர் தங்கச்சாமி(27). இவர், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள சிறப்பு பட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்தார். சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காய்ச்சல் அதிகரித்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் அதிகரிப்பால் அவரது உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம்…

Read More