தீபாவளிக்கு பின்னர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகலாம் என சச்சின் பைல்ட தகவல்

தீபாவளிக்கு பின்னர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகலாம் என சச்சின் பைல்ட தகவல்

காங்கிரஸ் கட்சியில் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தியைத் தொடர்ந்து அவர்களது வாரிசாக ராகுல் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். 46 வயதாகும் ராகுல்காந்தி 2004-ம் ஆண்டு அரசியலில் குதித்தார். அந்த ஆண்டு பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அமேதி தொகுதியில் தொடர்ந்து எம்.பி. ஆக இருந்து வரும் ராகுல் 2007-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பையும் அவர் வகித்தார். 2013-ம் ஆண்டு ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராகுலை காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் ஆக்க…

Read More

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மெரினா கடற்கரையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடையை மீறி நடத்த முயன்றதாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி (42), தமிழர் விடியல் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் டைசன் (27), மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் (32), உறுப்பினர் அருண்குமார் (27) உட்பட 17 பேரை சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்…

Read More

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஓராண்டுக்குப் பின்னர் முழுநேர ஆளுநர் நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஓராண்டுக்குப் பின்னர் முழுநேர ஆளுநர் நியமனம்

தமிழக புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இவர் மேகாலயா மாநில ஆளுநராக இருந்தவர். ரோசய்யா பதவிக்காலம் முடிந்தபின்னர் தமிழகத்துக்கு ஓராண்டுக்கு மேலாக பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருந்துவந்தார். மகாராஷ்டிர மாநில ஆளுநரான இவருக்கு தமிழக ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் அவரது மறைவு, அதிமுக பிளவு என அடுத்தடுத்து தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்திவந்தனர். இந்நிலையில், முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பார்வர்டு பிளாக்,…

Read More

இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசு சிறப்பு விருது

இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசு சிறப்பு விருது

தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை மத்திய அரசிடமிருந்து மதுரை நகராட்சி பெறவுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தூய்மை இந்தியா சிறந்த கோயிலுக்கான தேர்வு தொடங்கப்பட்டு 10 இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வாகியுள்ளது. நாளை (அக்டோபர் 2, 2017) மதுரை மாவட்ட ஆட்சியர் கே.வீர ராகவ ராவ், நகராட்சி ஆணையர் எஸ்.அனீஷ் சேகர் ஆகியோர் மத்திய அமைச்சர் உமா பாரதியிடமிருந்து விருதைப் பெறுகின்றனர். இது குறித்து அனீஷ் சேகர் கூறும்போது, முதலில் கோயிலின் சுற்றுப்புறத்தைத்…

Read More

அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ஓ. பன்னீர்செல்வம் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்பது நிறைய தடவை நிரூபணம் ஆகியிருக்கிறது. காலா காலத்துக்கும் தலைநிமிர்ந்து நிற்கப்போகிற இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்த பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது. இப்படித்தான் நடிக்க வேண்டும். இப்படித்தான் வசனம் பேசவேண்டும் என்று இருந்த கால கட்டத்தில் நடிப்பு, வசன உச்சரிப்பில், நடையில், பாவனையில் ஒரு புரட்சியையே உண்டாக்கிய அவரை தமிழ் ரசிகர்கள் மட்டும் ரசிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள நடிகர்களும் இந்த மாதிரி ஒரு நடிகரை பார்க்க முடியாது, அப்படி நடிக்கவும் முடியாது என்று சொல்லி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மகா நடிகர் சிவாஜி. அதற்காக அவருக்கு இந்த மணிமண்டபம் எழுப்பினார்களா? சிலை…

Read More