சிவில் சர்வீசஸ் தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி ஐதராபாத்தில் கைது

சிவில் சர்வீசஸ் தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி ஐதராபாத்தில் கைது

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 பதவி இடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு கடந்த 28–ந்தேதி தொடங்கி 5–ந்தேதி வரை நடக்கிறது. சென்னை உள்பட நாடு முழுவதும் 24 நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. ஐ.பி.எஸ். அதிகாரியான நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சபீர் கரீமும் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதற்காக இந்த தேர்வை எழுதினார். எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் சபீர் கரீம் 28–ந்தேதி முதன்மை தேர்வை எழுதினார். தேர்வாளர்களை போலீசார் கடுமையாக சோதனை செய்தபின்னரே மையத்துக்குள் அனுமதிப்பார்கள். சபீர் கரீம் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் போலீசார்…

Read More

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு விசாரணை

தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். செப்டம்பர் மாதம் 22-ந் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மரணம் அடைந்தார். ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதிலும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதிலும் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அ.தி.மு.க. தலைவர்கள் சிலரும் இந்த சந்தேகத்தை எழுப்பினார்கள். இதையடுத்து ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள மர்மங்களை கண்டுபிடிக்க உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டு விசாரணை ஆணையத்தை அமைத்தார். சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி…

Read More

அடுத்த தேவர் ஜெயந்திக்குள் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணி காணாமல் போகும் -டிடிவி தினகரன்

அடுத்த தேவர் ஜெயந்திக்குள் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணி காணாமல் போகும் -டிடிவி தினகரன்

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை கடந்த 28-ந்தேதி தொடங்கியது. முதல் நாள் விழா ஆன்மீக விழாவாகவும், 2-வது நாள் விழா அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு காலையிலேயே ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக நினைவிடம் வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் ஜோதி ஏந்தி வந்தனர். நினைவிடம் மற்றும் தங்க கவசத்தில் ஜொலித்த முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் டிடிவி…

Read More

கனமழை சென்னையில் போக்குவரத்து நெரிசல்; பள்ளி மாணவர்களை முன்னதாக வீட்டுக்கு அனுப்ப உத்தரவு

கனமழை சென்னையில் போக்குவரத்து நெரிசல்; பள்ளி மாணவர்களை முன்னதாக வீட்டுக்கு அனுப்ப உத்தரவு

வட கிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தென் மேற்கு வங்க கடலில் தமிழகத்தின் அருகே மேலடுக்கு சுழற்சி உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சென்னை மற்றும் வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் இன்று முதல் மழை தீவிரம் அடையும் என்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி சென்னையில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் அனைத்துப் பகுதியிலும் மழை கொட்டியது….

Read More

திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள்: மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து

திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள்: மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து

மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக்கோரிய வழக்கறிஞர் அஸ்வத்தமன் தொடர்ந்த பொது நல வழக்கு விசாரணையில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் சரமாரி கேள்வி எழுப்பியதோடு, வழக்கைத் தள்ளுபடி செய்தனர். மெர்சல் படத்துக்கு ஒரே நாளில் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பொது நல அக்கறை இருந்தால் திரைப்படத்தில் குடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடை கோருவதற்கு வரலாம். மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிப்பதை எதிர்த்து வரலாம். ஆனால் வரவில்லை. இது போன்றவற்றுக்கு எதற்காக வருகிறீர்கள்? மெர்சல் படத்துக்கு எதிராக இது போல் எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்தப் படத்தில் என்ன தவறு…

Read More

கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது: ரஜினிகாந்த் பேச்சு

கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது: ரஜினிகாந்த் பேச்சு

தமிழ் பட உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் ‘2.0’. ஷங்கர் இதை இயக்கி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த், நடிகை எமிஜாக்சன் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக வருகிறார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்படும் 2.0 படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழா துபாயில் டவுன் டவுன் பகுதியில் உள்ள புர்ஜ் பார்க் வளாகத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளை பெற்றிருக்க முடியாது என்றார். மேலும், ரஜினிகாந்த் கூறியதாவது:- பணம் புகழைவிட விட மன அமைதிதான்…

Read More

ஜெயலலிதா மரணம் பற்றிய விவரங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ நவம்பர் 22 க்குள் கூறலாம்-ஆறுமுக சாமி

ஜெயலலிதா மரணம் பற்றிய விவரங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ நவம்பர் 22 க்குள் கூறலாம்-ஆறுமுக சாமி

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந் தேதி இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல், டிசம்பர் மாதம் 5–ந் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று இப்போதைய துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது வலியுறுத்தினார். அதை ஏற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு மாதம் 17–ந் தேதி, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்பின்னர், கடந்த மாதம் (செப்டம்பர்) 25–ந் தேதி…

Read More

மயிலாடுதுறையில் பாஜக – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்

மயிலாடுதுறையில் பாஜக – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்

மயிலாடுதுறையில் பாஜகவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் உடைக்கப்பட்டன. மெர்சல் படம் விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி எந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பாஜகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வாகனங்கள் உடைக்கப்பட்டன. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த கருத்துகள் இடம் பெற்றதற்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யை வளைத்துப் போடுவதற்காக பாஜக திட்டமிடுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்….

Read More

நிலவேம்பு குறித்து சர்ச்சை ட்வீட்; முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதியலாம்: உயர் நீதிமன்றம்

நிலவேம்பு குறித்து சர்ச்சை ட்வீட்; முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதியலாம்: உயர் நீதிமன்றம்

நிலவேம்பு கசாயம் பற்றிய வதந்திகளை பரப்பும் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 18-ம் தேதி நிலவேம்பு கசாயம் குறித்து ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை தனது இயக்கத்தினர் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அரசின் செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் குறித்து கமல் தவறான தகவலைப் பரப்புவதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென அக்டோபர் 19-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில்…

Read More

ரூ.33 கோடிக்கு புதிய ரூ.2000 நோட்டு சேகர் ரெட்டிக்கு கிடைத்தது எப்படி? – ரிசர்வ் வங்கியில் போதிய தகவல்கள் இல்லாததால் திணறும் சிபிஐ

ரூ.33 கோடிக்கு புதிய ரூ.2000 நோட்டு சேகர் ரெட்டிக்கு கிடைத்தது எப்படி? – ரிசர்வ் வங்கியில் போதிய தகவல்கள் இல்லாததால் திணறும் சிபிஐ

தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் நோட்டுகள், அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதைக் கண்டறிய முடியாமல் சிபிஐ திணறி வருகிறது. ரூ.500, ரூ.1,000 உள்ளிட்ட உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பிறகு நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பணம் அச்சிடும் அரசு அச்சகங்களில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டன. ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள பணக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள், அங்கிருந்து பல்வேறு…

Read More
1 2 3 7