கியூபெக் சைவ மகாசபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்

கியூபெக் சைவ மகாசபை  விடுக்கும் முக்கிய அறிவித்தல்

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வண்ணம் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி நடைபெறவிருந்த எமது கியுபெக் சைவ மகாசபையின் 2017-2019 ஆண்டிற்கான நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான விசேட பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளது. சுபையின் தீர்மானத்தின்படி, ஆலய கீழ் மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி கூட்டம் ஒக்டோபர் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30க்கும் 10.00 மணிக்கும் இடையில் அங்கத்தவர்களின் வருகை கணக்கிடப்பட்டு, கோரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிற்பகல் 1.30 மணிவரை இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும். இக் கூட்டத்திற்கு தவறாது சமூகமளி;க்கும் வண்ணம் கியூபெக் சைவ மகாசபையின் அங்கத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுகி;ன்றனர்.

Read More

திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது

திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது

நாளை 30ம் திகதி சனி;ககிழமை நடைபெறவுள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி 11120 Tapscott Road, Scarborough என்னும் விலாசத்தில் அமைந்துள்ள “தமிழிசைக் கலாமன்ற” மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாட்டியம் மற்றும் பாரதி ஆர்ட்ஸ் இசைக்குழுவினர் வழங்கும் இசை நிகழ்ச்சி ஆகியன சிறப்பு நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ளன. ஆதரவற்ற சிறார்களின் வாழ்வாதரத்திற்கு நிதி சேகரிக்கும் முகமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 416 823 8588, 647 448 6869 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்.

Read More

மொன்றியால் நகரில் கூலிப்படைகளின் தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிய “மார்சே மாருதி” ஸ்ரீ சண்முகலிங்கம் அவர்கள்

மொன்றியால் நகரில் கூலிப்படைகளின் தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிய “மார்சே மாருதி” ஸ்ரீ சண்முகலிங்கம் அவர்கள்

மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலயம் என்னும் திருத்தலம் தற்போது வட அமெரிக்காவில் முருக பக்தர்கள் நாடிச் செல்லும் ஒரு ஸ்தலமாக திகழ்கின்றது. இதற்குக் காரணம் இந்த ஆலயத்தை அமைக்கும் முயற்சிகளில் நன்கு திட்டமிட்டு இயங்கிய பல அன்பர்களே ஆவார்கள். இந்த ஆலயம் அமைக்கும் பணியில் ஆரம்பத்தில் பல துறைகளைச் சார்ந்த பல பக்தர்கள் முன்னின்று உழைத்தார்கள். அவர்களில பொறியியலாளர்கள், வர்த்தகப் பெருமக்கள், முன்னாள் ஆசிரியர்கள், வங்கிகளின் உயர் அதிகாரிகள் என பல அன்பர்கள் ஆலய வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்துளளார்கள். இன்று இந்த ஆலய ஆலயம் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு ஆலயமாகவும் திகழ்கின்றது. இது இவ்வாறிரு;க்க, கடந்த 18ம் திகதியன்று காலை மேற்படி ஆலய நிர்வாகக்…

Read More

கனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனம் நடத்தும் சிறு வணிகம் சார்ந்த வர்த்தக வரிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு

கனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனம் நடத்தும்  சிறு வணிகம் சார்ந்த   வர்த்தக வரிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு

நீங்கள் ஒரு சிறு தொழில், வணிகம் அல்லது தனியார் நிறுவனத்தின் (Private Corporation) உடைமையாளாரா? மத்திய அரசு நடைமுறைப்படுத்த இருக்கும் சிறு வணிக வரி மாற்றம் உங்கள் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடும். அரசு என்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது, அதற்காக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்கள் என்ன, அவைகுறித்துத் தமிழ் வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு நம் ஒருமித்த கருத்துக்களை அரசிற்கும் தெரிவிக்கலாம் போன்றவற்றைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா? கனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனத்தின் வணிகம் மற்றும் வரித்துறைகளில் அனுபவமிக்க நிபுணர் குழு விவாதத்தில் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேற்படி கலந்துரையாடல் எதிர்வரும் செப்டம்பர் 30, 2017 காலை 8.30 மணிக்கு 1686 Ellesemere…

Read More

அகிம்சைப் போராளி திலீபனை நினைவு கூரும் மண்ணில் அயல்நாடு நடத்தும் “அகிம்சை” விழா

அகிம்சைப் போராளி திலீபனை நினைவு கூரும் மண்ணில் அயல்நாடு நடத்தும் “அகிம்சை” விழா

இந்திய இராணுவம் எமது தாய் மண்ணில் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தி;க கொண்டிருந்போது அறப்போர் செய்யப் புறப்பட்டான் திலீபன் என்னும் போராளி. அவன் கைகளில் ஆயுதம் இருந்தது. தகுந்த பயிற்சி பெற்று இராணுவத்தை எதிர்த்து போரிடக்கூடிய வல்லமை உடலில் இருந்தது. அவனது உள்ளத்தில் உறுதியிருந்தது. ஆனால் அவன் உண்ணாவிரதமிருந்து என் இனத்திற்கு விடுதலை வேண்டும் என்பதற்காக, தொடர்ச்சியாக அறப்போரை நடத்தினான். அகிம்சை என்னும் அறப்போர் செய்யும் ஆயுதத்தை உலகிற்கு வழங்கிச் சென்ற மகாத்மா காந்தி பிறந்த மண்ணை அப்போது ஆண்டவர்கள் தன் போராட்டத்தின் மகிமையை உணர்ந்து கொள்வார்கள் என்று அவன் நம்பியிரு;ந்தான். நாட்கள் நகர நகர தன் உயிர் பிரிவதிலும் பார்க்க ஒரு அகிம்சைப் போராளியி;ன் கோரிக்கையை…

Read More

வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்

வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவிப்பு ” வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்” வடக்கு மாகாண முதல்வர் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் இருப்பினும், திரு விக்கினேஸ்வரன் அவர்கள் வடக்கின் முதலவராக இருப்பதே எமக்கும் பலம் என்று நான் நினைக்கின்றேன். உள்ளுராட்சி சபைத் தேர்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நான் உதாசீனம் செய்ய விரும்பவில்லை. கூட்டாக செயற்படுவதே நான் விரும்புகின்றேன்” இவ்வாறு கொழும்பில் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பிற்குறிப்பு:- வடக்கின் முதலவராக சுமந்திரன் பதவியேற்றால் அவர் விலை போய்விடுவார்கள் என்பதும் ரணிலின் ஆதிக்கம் வடக்கில் உறுதியாகிவிடும் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ள படியால் தான்…

Read More

திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும்

திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும்

யாழ் மாவட்டத்தின் “புங்குடுதீவு” என்னும் புகழ் பூத்த கிராமத்தை “பூவரசம்தீவு” என்றும் “புங்கைநகர்”என்றும் அழைப்பதுண்டு. அவ்வாறன ஒரு உன்னத மண்ணில் உதித்தவரும், அங்கு அந்நாளில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகராக இருநது யாழ்ப்பாண மாவட்ட சபையின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுககபபட்டவருமான திரு சோமசுந்தரம் அவர்களது புதல்வராகவும், பின்னாளில் புங்குடுதீவின் கிராம சேவகராக பணியாற்றியவருமான திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும் கனடா பிரம்டன் ஈற்றோபிக்கோ நகரில் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. ஆரம்பத்தில் திரு சச்சிதானந்தன் மறறும் அவரது துணைவியார் ஆகியோர் இருவரும் நாதஸ்வர தவில் இசை முழங்க ஊர்வலமாக மேடைக்கு அழைத்துவரப்பட்டார்கள். தொடர்ந்து பாராட்டு உரைகள் கலை…

Read More

நடிகை ஸரத்தா ஶ்ரீநாத் இன்று காலை மிசிசாகா நகரில் உள்ள திரையரங்கொன்றில் கன்னட மொழி ரசிகர்களுக்கு காட்சி கொடுத்தார்

நடிகை ஸரத்தா ஶ்ரீநாத் இன்று காலை மிசிசாகா நகரில் உள்ள திரையரங்கொன்றில் கன்னட மொழி ரசிகர்களுக்கு காட்சி கொடுத்தார்

கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டவரும் தமிழ்த் திரைப்படமான “விக்ரம் வேதா” வில் கதாநாயகியாக மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரோடு நடித்து தமிழ்த் திரை இரசிகர்களை கவர்ந்தவருமான நடிகை ஸரத்தா ஶ்ரீநாத் இன்று காலை மிசிசாகா நகரில் உள்ள திரையரங்கொன்றில் தனது கன்னட மொழி ரசிகர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது மிகவும் புத்திகூர்மையான பதில்களை தனது கன்னட மொழி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்தார். காரணம் இவர் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று மிசிகாகா நகரில் திரையிடப்பட்ட ஒப்பரேசன் அலமேலம்மா என்னும் கன்னட திரைப்படத்தின் முதல்காட்சிக்கு அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் திரையரங்கிற்கு வருவதற்கு முன்னர் மேற்படி திரைப்படம் இடைவேளை…

Read More

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகள்

“கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனமும் இந்திய தபால் திணைக்களமும் .இணைந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகளை வெளியிட்டு இருப்பது, இந்த இரண்டு தேசங்களுக்கு இடையிலான உறவின் பலத்தையும் சகோதரத்துவத்தையும் நன்கு பிரதிபலிக்கின்றது” இவ்வாறு இன்று மதியம் ரொரென்ரோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற “கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனமும் இந்திய தபால் திணைக்களமும் .இணைந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகளை வெளியிட்டு வைக்கும் வைபவத்தில் இந்திய அரசு சார்பாக உரையாற்றிய கனடாவிற்கான இந்தியத் தூதுவர் திரு விகாஸ் ஸவர்ப் தெரிவித்தார். கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய பதவிகளை வகிப்;பதன் மூலம் இந்திய மக்களுக்கும்…

Read More

எம்.நடராஜன் கவலைக்கிடம்: பரோல் கேட்டு சசிகலா மனு

எம்.நடராஜன் கவலைக்கிடம்: பரோல் கேட்டு சசிகலா மனு

அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் (74), கல்லீரல் பாதிப்புக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 10-ம் தேதி திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரலும், சிறுநீரகமும் செயலிழந்துவிட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நடராஜனுக்கு தற்போது டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர் ஒருவரின் கல்லீரலை தானமாக பெற்று, நடராஜனுக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று நடராஜனின் உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். கணவர் நடராஜன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவரைப் பார்ப்பதற்காக தனக்கு பரோல் வழங்க…

Read More
1 2 3 7