ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்துள்ள 2.0, விஸ்வரூபம்-2 படங்கள் திரைக்கு வருவது எப்போது?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்துள்ள 2.0, விஸ்வரூபம்-2 படங்கள் திரைக்கு வருவது எப்போது?

ரஜினிகாந்தின் ‘2.0’, கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ ஆகிய படங்கள் திரைக்கு வருவது எப்போது என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படங்களின் இறுதி கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. ரஜினி-கமல் படங்கள் ரஜினிகாந்த், ‘எந்திரன்’ இரண்டாம் பாகமான ‘2.0’ படத்திலும், கமல்ஹாசன் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகமான ‘விஸ்வரூபம்-2’ படத்திலும் நடித்து முடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களுமே பல வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் உள்ளன. இவை எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள். ‘2.0’ எந்திர மனிதன் சம்பந்தமான கதை என்பதால் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இடம்பெறுகிறது. சமீபத்தில் வெளியான பாகுபலி-2 படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன. அதேபோல் ‘2.0’ படத்திலும்…

Read More

விவேகம் படத்தில் அஜித் சாதனை பாடல்

விவேகம் படத்தில் அஜித் சாதனை பாடல்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஜித் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில் ‘தீம்’ பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். இதில் அவருடைய சாதனைகள் பற்றிய வரிகள் உள்ளன. இந்த பாடலுக்காக அனிருத் பல ராகங்களை போட்டு காட்ட, அதில் ஒரு ராகத்தை அஜித் தேர்ந்தெடுத்துள்ளாராம். அது ‘தீம்’ பாடலாக உருவாகி…

Read More

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ரிஷாப், குல்தீப் யாதவ் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ரிஷாப், குல்தீப் யாதவ் சேர்ப்பு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் இந்திய அணி அங்கிருந்து நேரடியாக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 23-ந்தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், ‘சைனாமேன்’ வகை பந்து வீச்சாளர் குல்தீப்…

Read More

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை:ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை:ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

“ஆந்திர மாநிலத்தின், கொசஸ்தலை கிளை ஆற்றில், நான்கு இடங்களில் தடுப்பணை கட்டும் விவகாரம் குறித்து உங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த தடுப்பணை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். தடுப்பணை கட்டுவது குறித்து தமிழகத்துடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கவில்லை. ஆந்திர அரசு தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தின் நிலைப்பாட்டை அறிந்த பின் ஆந்திரா நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே, தடுப்பணை கட்டும் பணிகளை ஆந்திர அரசு உடனே கை விட வேண்டும். இதில் தாமதம் காட்டாமல், தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

வெளிநடப்பு செய்வதை தவிர்த்து எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன்

வெளிநடப்பு செய்வதை தவிர்த்து எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன்

காஞ்சீபுரத்தில் நடந்த ஒரு விழாவில் மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– அரிசி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை மத்திய அரசு தவிர்த்து ஏழை, எளிய மக்களுக்கு நன்மை செய்துள்ளது. ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் தான் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விகித முறை கொண்டு வருவதால் பல்வேறு பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மதிப்பளிக்க வேண்டும் சட்டமன்றத்தில் சபாநாயகர், முதல்–அமைச்சர் ஆகியோர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களின் கருத்தை…

Read More

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை: அதிமுக ஜெ.தீபா அணியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை: அதிமுக ஜெ.தீபா அணியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை யின் பெயர் அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றப்பட்டுள்ள தாக அதன் பொதுச்செயலாளர் ஜெ.தீபா நேற்று அறிவித்துள் ளார். இதுதொடர்பாக ஜெ.தீபா சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய எங்களுக்கு கால அவகாசம் அளிப்பது குறித்து தேர்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமை பதிலளிக்க உள்ளது. பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி அளிக்கப்பட்ட மனு குறித்தும் விரைவில் பதில் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பெயர் அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read More