கதை ஈர்த்துவிட்டால் கஷ்டங்கள் தெரியாது!- சாய் தன்ஷிகா நேர்காணல்

கதை ஈர்த்துவிட்டால் கஷ்டங்கள் தெரியாது!- சாய் தன்ஷிகா நேர்காணல்

‘கபாலி’யில் ஆக்‌ஷன் பகுதியில் அசத்திய சாய் தன்ஷிகா பரபரப்பாக இருக்கிறார். தமிழில் ‘உரு’ படத்தைத் தொடர்ந்து ‘காலக்கூத்து’, ‘காத்தாடி’, ‘விழித்திரு’ என்று வரிசையாக அவரது நடிப்பில் படங்கள் வெளிவர உள்ளன. இதற்குப் பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்கள் என்றும் டைரியை நிரப்பி வைத்திருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்.. ‘கபாலி’ படத்தை அடுத்து பா.இரஞ் சித் இயக்கும் ‘காலா’ படத்தில் நீங்கள் இல்லையே? நான் மட்டுமல்ல; முந்தைய படக் குழுவினர் யாருமே இதில் இல்லை. ‘காலா’ கதைக்களம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ‘கபாலி 2’ எடுத்தால் எங்களுக்கு வேலை இருக்கலாம். அதையும் கதையின் சூழல்தான் முடிவு செய்யும். விரைவில் வெளிவர உள்ள ‘உரு’…

Read More

‘அக்னி நட்சத்திரம்’ ரீமேக்கில் நடிக்க மாட்டேன்: கெளதம் கார்த்திக்

‘அக்னி நட்சத்திரம்’ ரீமேக்கில் நடிக்க மாட்டேன்: கெளதம் கார்த்திக்

‘அக்னி நட்சத்திரம்’ ஒரு தரம் வாய்ந்த படைப்பு. கண்டிப்பாக அதன் ரீமேக்கில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் கௌதம் கார்த்திக் கூறியுள்ளார். ராஜ்குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘ரங்கூன்’ விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கண்ணன் இயக்கித்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘இவன் தந்திரன்’ வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று (ஜூன் 13) கெளதம் கார்த்திக் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “’சிப்பாய்’, ’இவன் தந்திரன்’, ’ஹரஹர மகா தேவகி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன். இப்போது ‘நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறேன். அப்பா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி…

Read More

டிடிவி தினகரன் மீது காவல் ஆணையரிடம் தீபா புகார்

டிடிவி தினகரன் மீது காவல் ஆணையரிடம் தீபா புகார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா. இவரது சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளிக் கப்பட்டுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது சகோதரர் தீபக் அழைத்ததின் பேரில் கடந்த 11-ம் தேதி போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு சென்றேன். என்னுடன் எனது நலன் விரும்பிகளும் வந்திருந்தனர். அங்கு பத்திரிகை நிருபர்களும் இருந்தனர். அப்போது அங்கிருந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், பத்திரிகை நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த கோதண்டராமன் மற்றும் அவ ருடன் இருந்தவர்கள் எங்கள் மீது தாக்கு தல் நடத்தி வெளியே தள்ளினர். தீபக் உறுதுணையோடு டிடிவி தினகரன் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடைபெற்றது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள்…

Read More

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: காணொலி காட்சி மூலம் 21-ம் தேதி சசிகலா ஆஜராகிறார்- எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: காணொலி காட்சி மூலம் 21-ம் தேதி சசிகலா ஆஜராகிறார்- எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக பெங்களூரு சிறையில் உள்ள வி.கே.சசிகலா வரும் 21-ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட தாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தனது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக தன்னால் நேரில் ஆஜராக முடியாது. எனவே பெங்…

Read More