அமரர். செல்லப்பா சுப்பிரமணியம்

அமரர். செல்லப்பா சுப்பிரமணியம்

7ம் ஆண்டு நினைவஞ்சலி தோற்றம் : 06-08-1922 – மறைவு : 09-06-2010 ஐயா! நீங்கள் மறைந்து இன்று ஏழு ஆண்டுகள் நீங்கள் மறைந்துவிட்டீர்கள் ஆனால் மறக்க முடியவில்லை. ‘ஐயா’ என்ற அந்த அருமையான வார்த்தை – அது கொண்டுவரும் ஞாபகங்களோ ஏராளம் அந்த அழகிய புன்முறுவல் உதவிடும் அன்புக் கரம் இரங்கிடும் இனிய இதயம் எதை நாம் மறப்போம் ஐயா? நாங்கள் உயர வேண்டும் என்பதற்காய் நீங்கள் குனிந்த இடங்கள் எத்தனையோ இன்னலுறாமல் நாம் வாழ நீங்கள் செய்த தியாகங்கள் எத்தனையோ உங்கள் உதிரத்தை வியர்வையாக்கி எங்களைக் குளிர வைத்தீர்கள் எங்கள் பட்டம் பதவிகளுக்காய் நீங்கள் கனவு கண்டீர்கள் கற்பாறையில் சிலை வடிக்கும் சிற்பியைப்போல்…

Read More

திரு. இளையதம்பி இராமசாமி

திரு. இளையதம்பி இராமசாமி

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும் தோற்றம்: 26-10-1930 – மறைவு: 11-05-2017 கோண்டாவில் நெட்டிலைப்பாயை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியாலை வதிவிடமாகவும் கொண்டதிரு. இளையதம்பி இராமசாமி அவர்கள் 31ம் நாள் நினைவு நாளும் நன்றி நவிலலும் எமையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மாளாத் துயில் கொண்ட எங்கள் குடும்பக் குலவிளக்கு பாசத்தின் உறைவிடம் அமரர் இழையதம்பி இராமசாமி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு எமது வதிவிடம் தேடிவந்தும்,தொலைபேசியில் தொடர்பு கொண்டும், ஆறுதல் வார்த்தை பகிர்ந்தவர்க்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் மற்றும் மலர் வளையம் வைத்த யாவருக்கும், வீட்டுக் கிருத்தியத்தில் பங்கு கொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எம் குலவிளக்கின்…

Read More

திரு.செல்வபெர்னான்டோ ராஜசேகரம்

திரு.செல்வபெர்னான்டோ ராஜசேகரம்

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும் தோற்றம்: 06 வைகாசி 1954 – மறைவு: 07 வைகாசி 2017 எப்பொழுதும் எம்முடனே வாழ்வீரென நினைத்தோம் இடைவழியில் இறைவனிடம் செல்ல ஏன் நினைத்தீர் முப்பத்தியொரு நாட்களின் முன் பிரியாமல் பிரிந்தீர் சிந்தை கலங்கித் தவிக்கிறோம் வருவீரோ மீண்டும்! எங்கிருந்து வந்ததோ அந்தக் கொடிய நோய் எப்படித் தாங்குவோம் எம் சிந்தை கலங்கினோம் எப்போது மீண்டும் நாம் தங்களைக் காணுவோம் இறையாசி வேண்டுகிறோம் அமைதியில் உறங்குவீர்! அமரர் ராஜசேகரம் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது வருகைதந்தோர், அழைத்து ஆறுதல் கூறியோர், இவரது இழப்பின்போது பல்வேறு வகையிலும் கவலையைப் பகிர்ந்து கொண்டோர், மலர்வளையம் மற்றும் தகவல் அனுப்பியோர், இறுதிக் கிரிகைகளில் பங்கேற்றோர், பிரார்த்தனைகளை வழங்கியோர்…

Read More

திரு கதிரித்தம்பி சண்முகநாதன்

திரு கதிரித்தம்பி சண்முகநாதன்

மரண அறிவித்தல் தோற்றம் : 06-01-1928 – மறைவு : 01-06-2017 யாழ் கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும் அல்வாய் மற்றும் Scarborough Canada வை வதிவிடமாகவும் கொண்ட திரு கதிரித்தம்பி சண்முகநாதன் அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலஞ்சென்ற கதிரித்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் யாழ்நகர், நல்லூர் கதிரித்தம்பி தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், சரஸ்வதியின் அன்புக் கணவரும், திருச்செல்வி, யசோதரை, தேவகுமாரன், கார்த்திகேயன், ஆகியோரின் அன்புத் தந்தையும், ரவீந்திரன், ஈஸ்வரலிங்கம், இந்திரா, சுஜிதா அவர்களின் அன்பு மாமனாரும் மதுரா, மித்திரா, ஆர்த்தி, அர்ச்சனா, செழியன்;, சஹானா, யாதவி, ஹரிஷ், நிதுரன், அனந்திகா, அவர்களின் அன்புப் பேரனும், சேயா, சேந்தன் ஆகியோரின்…

Read More