சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறார் பிரதமர்: டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறார் பிரதமர்: டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

சர்வாதிகாரத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டு வரு கிறார் என மாநிலங்களவை திமுக உறுப்பினர் டிகேஎஸ் இளங் கோவன் குற்றம்சாட்டியுள்ளார். இறைச்சிக்காக மாடுகள் விற் பதற்கு மத்திய அரசு தடை விதித் துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழ கம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடை பெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடை பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலை வர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பீமராவ், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

Read More

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள் பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள் பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு சங்க பயிர் கடன் தமிழ்நாட்டில் 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏற்க முடியாதது மட்டுமின்றி, கண்டிக்கத்தக்கதும் ஆகும். நியாயமான நடவடிக்கை தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து கடும் வறட்சி வாட்டி வதைத்து வரும் நிலையில், அனைத்து விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இயற்கை அதன் கொடுங்கரங்களால் பேரழிவைக் கட்டவிழ்த்து விடும்போது, அது சிறு, குறு விவசாயிகள்,…

Read More

சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் ஆகின்றன

சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் ஆகின்றன

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் 3 பேர் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துவைத்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கு முதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான்மைக்கேல் குன்கா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து 4 ஆண்டு ஜெயில் தண்டனை, அபராதம் மற்றும் சொத்துகள் பறிமுதல் ஆகியவை உறுதி செய்யப்பட்டன. இதற்கிடையே ஜெயலலிதா மரணம் அடைந்ததால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தற்போது கோர்ட்டு…

Read More

மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் மோடி அரசு தடை: ஜூன் 2 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் மோடி அரசு தடை: ஜூன் 2 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாடுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் மத்திய அரசு தடை விதித்து வெளியிட்டுள்ள அறிவிக்கையை அடுத்து ஜூன் 2-ம் தேதி தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் மத்திய அரசு தடை விதித்திருப்பது மக்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு சமம். இந்த அறிவிப்பை உடனடியாக பாஜக அரசு திரும்பப்பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். மத்தியில் ஆளும் மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத அறிவிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஜூன் 2 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

Read More

82 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி: தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

82 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி: தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு முதல்முறையாக தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கிவைத் தார். ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை கடந்த 1934-ம் ஆகஸ்ட் 21-ம் தேதி கட்டப்பட்டது. அணை கட்டி முடிக்கப்பட்டு 82 ஆண்டு களுக்கு மேல் ஆகிவிட்ட நிலை யில், இதுவரை அணையில் தூர் வாரப்படவில்லை. இந்நிலையில், மேட்டூர் அணையில் மூலக்காடு நீர்பரப்புப் பகுதியில் தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அணையின் வலது கரைப் பகுதியில் உள்ள மூலக்காடு, கொளத்தூர், பண்ணவாடி, இடது கரைப் பகுதியில் உள்ள கூணான் டியூர் மற்றும்…

Read More

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: அரசின் முடிவை அரசியலாக்க வேண்டாம்; மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: அரசின் முடிவை அரசியலாக்க வேண்டாம்; மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணியை அரசு தொடங்கி இருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். குறிப்பாக மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் தொடங்கி இருப்பதாக வருகிற செய்தி பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. மழை வரும் போது அவர்கள் தூர்வாரும் பணியை தொடங்கி இருக்கிறார்கள். 2 மாதத்திற்கு முன்னதாக இந்த பணியை தொடங்கி இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் மண்ணை விவசாயிகள், மண்பாண்டம் மற்றும் பொம்மைகள் செய்யக்கூடியவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆற்று மணலை நேரடியாக விற்பனை செய்யும் நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்திருப்பது பாராட்டுக்குரியது….

Read More

ஒரு வாரத்திற்குள் அணிகள் இணைப்புக்கு வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் சீனிவாசன் பேட்டி

ஒரு வாரத்திற்குள் அணிகள் இணைப்புக்கு வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் சீனிவாசன் பேட்டி

கொடைக்கான‌லில் வ‌ன‌த்துறை அமைச்ச‌ர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியார்களிடம் கூறியதாவது: நடிகர் ர‌ஜினி அர‌சிய‌லுக்கு வ‌ருவ‌து வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌து. பேச்சுவார்த்தையின் அம்சங்கள் குறித்து தற்போது வெளியிட முடியாது. அணிகள் இணைப்புக்கு பேச்சுவார்த்தை நடப்பதாக முதல்-அமைச்சர் கூறியது உண்மை தான். அனைத்து அமைச்ச‌ர்க‌ளையும் கூட்டி முதல்-அமைச்சர் த‌லைமையில் மாட்டிறைச்சி விவ‌கார‌த்தில் முடிவெடுக்க‌ப்ப‌டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

மும்பையில் ரஜினிகாந்தின் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கியது; நெல்லை தமிழ் பேசி நடித்தார்

மும்பையில் ரஜினிகாந்தின் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கியது; நெல்லை தமிழ் பேசி நடித்தார்

பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது ரஜினிகாந்தின் 164–வது படம் ஆகும். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். கதாநாயகியாக இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், ரவிகேளா, சயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டீல், சுகன்யா ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு காலா படப்பிடிப்பு மும்பையில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் பூஜை போட்டு சாமி கும்பிட்டு விட்டு படப்பிடிப்பை தொடங்கினார்கள். ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி, ஜிப்பா,…

Read More

அனுஷ்காவுக்கு எப்போது திருமணம்?

அனுஷ்காவுக்கு எப்போது திருமணம்?

கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, அமைதியான சுபாவம், ஆக்ரோஷமான நடிப்பு.. போன்றவைகளின் கலவையாக காட்சியளிப்பவர், நடிகை அனுஷ்கா ஷெட்டி. குடும்பம், திருமணம், எதிர்காலம் பற்றி அவர் சொல்கிறார்: *கர்நாடகாவில் நான் பிறந்தேன். என் பெற்றோர் வித்தல் ஷெட்டி- பிரபுல்லா. குணராஜ் ஷெட்டி, சாய் ரமேஷ் ஷெட்டி என்ற இரு சகோதரர்கள் எனக்கு உண்டு. எனது யோகா குரு பரத் தாகூருக்கு என் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். பட்டப்படிப்பு முடித்த பின்பு சிறிது காலம் யோகா ஆசிரியையாக வேலை பார்த்தேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு திரை உலகத்தை பற்றி எதுவுமே தெரியாது. *2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானேன். நாகார்ஜூனா கதாநாயகன். பின்பு…

Read More

பா.ஜ.க. அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழா: சென்னையில், பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பா.ஜ.க. அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழா: சென்னையில், பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 3 ஆண்டுகால சாதனைகள் குறித்து, தமிழ் மொழியில் இணையதளம் தொடங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இணையதளத்தை தொடங்கிவைத்தார். இதனைதொடர்ந்து பிரதமர் மோடியின் உருவம் பொறித்த ஸ்டிக்கரை, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார். அப்போது இல.கணேசன் எம்.பி. உடன் இருந்தார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவினை வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்….

Read More
1 2 3 13