அமரர். உயர்திரு. தம்பு இராமலிங்கம்

அமரர். உயர்திரு. தம்பு இராமலிங்கம்

18ம் ஆண்டு நினைவஞ்சலி தோற்றம்:-02-06-1925 – மறைவு:- 01-05-2004 அன்பின் உறைவிடமாய் பாசத்தின் நிறைகுடமாய் பண்பின் சிகரமாய் பாரினில் உயர்ந்தவராய் இன்முகம் காட்டி இனிய மொழி பேசிய நல்லவரே! ஊர் உள்ளமெங்கும் உத்தமனாய் உறைந்துவிட்டீர்கள்! உங்கள் நினைவலைகள் எமை விட்டு மறையாதய்யா உங்கள் ஆத்மா சாந்திக்காய் உளம் உருகி இறைவனிடம் வேண்டுகின்றோம்… Share on Facebook Share Share on TwitterTweet Share on Google Plus Share Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share Send email Mail Print Print தகவல் 905-475-8089

Read More

திருமதி. வரதலக்ஷ்மி கதிர்காமத்தம்பி

திருமதி.  வரதலக்ஷ்மி கதிர்காமத்தம்பி

மரண அறிவித்தல் தோற்றம்:-26-04-1922 – மறைவு:- 26-04-2017 யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்படமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வரதலக்ஷ்மி கதிர்காமத்தம்பி அவர்கள் 26-04-2017 அன்று கொழும்பில் காலமானார். .. அன்னார் வைரமுத்து – விசாலாட்சி தம்பதியினரின் பாசமிகு மகளும், காசிப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும், னுச. கதிர் துரைசிங்கம் (கனடா), விசாகப்பெருமாள் (வெள்ளவத்தை), திருமதி. அம்பிகாதேவி (வெள்ளவத்தை), சறோஜாதேவி (வெள்ளவத்தை) ஆகியோரின் அன்பு தாயாரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, ராஜேந்திரம், அன்னலக்ஷ்மி, செல்வலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும், திருமதி. பூமணி துரைசிங்கம் (கனடா), திருமதி. நளினா விசாகப்பெருமாள், னுச. கந்தையா…

Read More

திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா

திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா

மரண அறிவித்தல் தோற்றம்:-02 – 03 – 1969 – மறைவு:- 27 – 04 – 2017 கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும். கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மகளும், ஆவரங்காலைச்சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகளும். தவராஜா அவர்களின் பாசமிகு மனைவியும், அனோஜ், துஷன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும், கிருபாம்பாள், கிருபானந்தன், கிருஸ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி மற்றும் கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால், காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன் மற்றும் கிருஷ்ணநாதன், கிருஷ்ணவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுந்தரராஜா, தியாகராஜா, சரஸ்வதி, காலஞ்சென்ற சம்பூரணன்…

Read More

திருமதி பூபதி கந்தையா

திருமதி பூபதி கந்தையா

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் தோற்றம்:-17-05-1946 – மறைவு:- 25-03-2017 யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூபதி கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி எங்கள் குடும்பத்தின் குலவிளக்கு பூபதி கந்தையா இறைவனடி சேர்ந்த வேளையில் எங்கள் இல்லத்திற்கு நேரில் வந்து அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களிற்கும், தொலைபேசி மூலம் எமக்கு ஆறுதல் கூறி எமது துக்கத்தில் பங்கு கொண்டு அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், இறுதிக் கிரியைகளில் கலந்து மலர் வளையங்கள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டோருக்கும், அத்ம சாந்திப் பிரார்த்தனையில் கலந்து ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை புரிந்த அனைவருக்கும் எங்களோடு பல வழிகளிலும்…

Read More

தமிழ்மொழிக்கு மோடி பாராட்டு: தமிழகத்தில் பாஜக காலூன்றும் முயற்சியா?

தமிழ்மொழிக்கு மோடி பாராட்டு: தமிழகத்தில் பாஜக காலூன்றும் முயற்சியா?

மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ் மொழியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிப் பேசியுள்ளார். இதன் பின்னணியில் தமிழகத்தில் பாஜக காலூன்றும் முயற்சி இருப்பதாக கருத்து எழுந்துள்ளது. நாட்டின் அனைத்து மாநில முதல்வர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, சர்தார் பட்டேல் பிறந்த நாள் கொண்டாடப்படும் முக்கியத் துவத்தை எடுத்துக்கூறினார். ‘ஒரே நாடு, உயர்ந்த நாடு’ என்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் இது கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டார். அப்போது நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை சுட்டிக் காட்டினார். இதில் குறிப்பாக தமிழ்மொழி குறித்து அவர் பேசியது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற எடுத்த முயற்சி என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. நிதி…

Read More

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்ப்பந்தத்தால் சசிகலா படம் அகற்றம்: கே.வி.ராமலிங்கம் எம்எல்ஏ கருத்து

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்ப்பந்தத்தால் சசிகலா படம் அகற்றம்: கே.வி.ராமலிங்கம் எம்எல்ஏ கருத்து

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்ப்பந்தத்தால் சசிகலா படம் அகற் றப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பின ருமான கே.வி.ராமலிங்கம் தெரிவித் தார். ஈரோட்டில் நேற்று ‘தி இந்து’ விடம் அவர் கூறியதாவது: அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்துக்காக ரூ.50 கோடி வரை பேரம் பேசி யது யார் என்று இதுவரை சொல்ல வில்லை. யாருக்காக லஞ்சம் கொடுக்கச் சென்றனர் என்பதையும் தெரியப்படுத்தவில்லை. யாரோ ஒருவர் சொன்னதை வைத்து தினகரனை கைது செய் துள்ளனர். அவரை மிரட்ட வேண் டும் என்று கைது செய்துள்ளனர். அதிமுக இரு அணிகளையும் இணைப்பது…

Read More

விவசாயிகளுக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு

விவசாயிகளுக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு

திமுக ஆட்சியின் போது விவசாயிகளுக்காக ஒன்றுமே செய்யாத மு.க.ஸ்டாலின் தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என வைகோ குற்றம் சாட்டினார். கடந்த 2009-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோ அண்மையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் கைது செய்யப்படார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் அவரது காவல் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் 10 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார். மூன்றாவது முறையாக வைகோவின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்முறை, ஜூன் 2-ம் தேதிவரை வைகோவை காவலில் வைக்க…

Read More

தாயும்,தந்தையும் இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம்

தாயும்,தந்தையும் இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம்

எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவின் வழிகாட்டுதலால் சிறப்பாக செயல்பட்டது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தாய் தந்தையை இழந்து தவிப்பது போல தனித்துவிடப்பட்டுள்ளோம்.அ.திமு.,க இணைய வேண்டும் என இரு அணி தலைவர்களும் விரும்புகிறார்கள்.அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிமுக ஒன்றாக செயல்படும். கூட்டுறவு வங்கிகள் தனியார் வங்கிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றன. ரூ 7 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Read More

நியாயமான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நியாயமான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மின்வெட்டு தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோடை வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்தடையை போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகிவிட்டதாகக் கூறி இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது மின்தட்டுப்பாடு நிலவுவதற்கு தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம் தான் காரணமாகும். வல்லூர் அனல் மின் நிலையத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1,156 கோடியை தமிழக அரசு செலுத்தாததால், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 1,065 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்திவிட்டது. சென்னையில்…

Read More

ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா

ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா

கடந்த மார்ச் மாதம் 25ம் திகதி ஸ்காபுறோநகரில் நடைபெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்நாட்டிற்குரிய சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட தமிழக அறிஞர் ஈழத் தமிழர்களுக்காக என்றும் குரல் கொடுப்பவர் மற்றும் உலகக் கவிஞர்கள் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா. கனடாவின் ஸ்காபுறோநகரில் 876 Markham Road என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Fabian’s Cafe’ உணவகத்தின் கூட்டமண்டபத்தில் எதிர்வரும் 30-04-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை மேற்படி நூல்களின் அறிமுக விழா நடைபெறும். அறிமுகம் செய்துவைக்கப்படவுள்ள அறிஞரின் நூல்கள் பின்வருமாறு:- சேதுகாப்பியம் 8ம் காண்டம், யேசுஅந்தாதி, தமிழ்ப் பணியில்…

Read More
1 2 3 17