இந்த வார (31/03/2017) இ-பேப்பர்

இந்த வார (31/03/2017) இ-பேப்பர்

இந்த வார (31/03/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் ‘தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி’; ஜெ.தீபா பேட்டி

அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் ‘தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி’; ஜெ.தீபா பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தேர்தல் பணிமனையை பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா திறந்து வைத்தார். இந்த விழாவில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் குமரி செந்தில்குமரன், கடலூர் செல்வவிநாயகம், மற்றும் செல்வராஜாமணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சந்தேக மரணத்துக்கு நீதி… விழாவை தொடர்ந்து ஜெ.தீபா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ஜெயலலிதாவின் சந்தேக மரணத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தீர்ப்பு அமையும். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த சசிகலாவின் பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும் என நம்புகிறேன். டி.டி.வி.தினகரன் அன்னிய செலாவணி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது அனைவருக்கும்…

Read More

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் -பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் -பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார். சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பணபலத்தை மீறி மக்கள் பலத்தை நம்பி ஆர்.கே நகரில் போட்டியிடுகிறோம். வருடாந்திர பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கிறார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் விரைவில் பரப்புரைக்கு வருவார். தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம். நதிகள் இணைப்பு விவசாயிகள், கச்சத்தீவு மீட்பு மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாகும் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Read More

நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம் செயல்படுத்தப்படும் ஓ.பிஎஸ் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு

நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம் செயல்படுத்தப்படும் ஓ.பிஎஸ் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு

அதிமுக பரட்சிதலைவி அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகரில் தேர்தல் பணிமனை திறக்கபட்டது.பின்னர் ஆர்.கே.நகர் தேர்தல் தேர்தல் அறிக்கை வெளியிடபட்டது. அதிமுக பரட்சிதலைவி அம்மா அணி சார்பில்  108 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டார். * இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் *  ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக்கப்படும் * நடமாடும் எம்.எல்.ஏ அலுவகம் செயல்படுத்தப்படும்* ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த நடவடிக்கை * எழில் நகர் பகுதியில் சுற்றுலா மையம் அமைக்கப்படும். * ஆர்.கே.நகர் தொகுதியில் பெண்களை தொழில் முனைவோர் ஆக்க நடவடிக்கை*ஆர்.கே.நகரில் உள்ள அரசு கல்லூரி உலக தரத்துக்கு மாற்றப்படும் * அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி…

Read More

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய இளைஞர்கள் கைது

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய இளைஞர்கள் கைது

டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். விவசாயிகள் தரப்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 16வது நாளான இன்று போராட்டத்தில் விவசாயிகள் தங்கள் வாயில் பாம்புக்கறியை வைத்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த 2 நாட்களாக மெரினாவில் மாணவர்கள் ஒன்று கூடி போராட போவதாக தகவல் வெளியானதை அடுத்து அதை தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். …

Read More

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளில் ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளில் ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி

டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் 15-வது நாளான நேற்று அனைத்து விவசாயிகளும் மகாத்மா காந்தி படத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவினரை புதுச்சேரி மாநில முதல் மந்திரி வி.நாராயணசாமி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மணிசங்கர் அய்யர், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான சோம்நாத் பாரதி, கேரளாவின் விவசாயத்துறை மந்திரி சுனில் குமார் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, அ.தி.மு.க. எம்.பி. ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங்கை சந்தித்தனர்….

Read More

இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் தேர்தல் அறிக்கை மாஃபா பாண்டியராஜன் பேட்டி

இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் தேர்தல் அறிக்கை மாஃபா பாண்டியராஜன் பேட்டி

முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மாஃபா பாண்டியராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- எங்கள் அணியின் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இந்தியாவிலேயே இதுவரை எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் எங்கள் முதல் எதிரியே தி.மு.க.தான். எங்கள் பிரசாரம் அவர்களுக்கு எதிராகத்தான் அமையும். ஆர்.கே.நகரில் இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்கிறார். அப்போது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிப்பார். சசிகலாவும், தி.மு.க.வும் குடும்ப அரசியல் செய்கிறார்கள். குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதுதான் எங்கள் அணியின் குறிக்கோள்.ஆர்.கே.நகர் தொகுதியில் எங்கள் அணியின் கை ஓங்கி வருகிறது. அதனால்தான்…

Read More

ஓ.பி.எஸ். அணி சார்பில் விரைவில் ‘அம்மா’ டி.வி. ஒளிபரப்ப திட்டம்

ஓ.பி.எஸ். அணி சார்பில் விரைவில் ‘அம்மா’ டி.வி. ஒளிபரப்ப திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று டெலிவிஷன் சேனல்களை நடத்துகின்றன. இதன் மூலம் அந்த சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு  செய்து வருகின்றன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.இதில் முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி புதிய டெலிவிஷன் சேனல் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளது. ‘அம்மா டி.வி.’ என்ற பெயரில் 24 மணி நேர செய்தி சேனல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டி.வி. தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான இடம் நுங்கம்பாக்கத்தில்  தேர்வு செய்யப்பட்டு வருவதாக ஓ.பி.எஸ். அணி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த அணியின் மூத்த தலைவர் ஒருவர்…

Read More

நேரம் கூடி வரும்போது சந்திப்போம் இலங்கை தமிழர்களே – ரஜினிகாந்த்

நேரம் கூடி வரும்போது சந்திப்போம் இலங்கை தமிழர்களே – ரஜினிகாந்த்

இலங்கை தமிழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என ரஜினிகாந்த் கூறி உள்ளார். இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று ரஜினிகாந்த் இலங்கை செல்ல இருந்தார். ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இலங்கை செல்லும் பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கியதற்கு கண்டனம் தெரிவித்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலின் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்…

Read More

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் நீதிபதி அதிர்ச்சி

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் நீதிபதி அதிர்ச்சி

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் இரு தரப்பின் செயல்பாடுகள் தனக்கு அதிர்ச்சி அளித்ததாக நீதிபதி தெரிவித்தார். மேலூர் அருகே மலம்பட் டியைச் சேர்ந்த கதிரேசனும், அவரது மனைவி மீனாட்சியும் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரி, மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் ஆஜரானார். அப்போது கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா என்பது தொடர்பாக…

Read More
1 2 3 15