2017 ANNUAL SHOW OF SWARA SAAHITHHIYA MUSIC ACADEMY, IN SCARBOROUGH, CANADA………

கனடாவில் இயங்கிவரும் ஸ்வர சாகித்திய சங்கீத அக்கடமி இசை நிறுவனத்தின் 2017ம் ஆண்டுக்குரிய வருடாந்த இசை விழா இனறு மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள ஶ்ரீ சத்திய சாயி பாபா கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற்து.

இசை நிறுவனத்தின் ஸ்தாபகர்களும் இசையாசிரியைகளுமான சங்கீத கலா வித்தகர்கள் திருமதி சுஜாதா சிவகாந்தன், திருமதி சங்கீதா கோகுலன் ஆகியோரின் ஏற்பாட்டில் பெற்றோர் மற்றும் சிரேஸ்ட மாணவிகளின்; ஒத்துழைப்புடன் இன்றை விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் பிரதம விருநதினராக நடன ஆசிரியை திருமதி சூரியகலா சந்திரிகா ஜீவநாதன் மற்றும் சிறப்பு விருந்தினராக மிருதங்க வித்துவான் திரு ரதிரூபன் பரம்சோதி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
வயதில் குறைந்த ஆரம்ப வகுப்பு மாணவ மாணவிகள் கூட தங்கள் இசை ஆசிரியைகளினதும் சிரேஸ்ட மாணவிகளினதும் சிறந்த பயிற்சியின் காரணமாக தங்களுக்கு வழங்கப்பட்ட பாடல்களை உருகிப் பாடினார்கள்.
தொடர்ச்சியாக எந்த வித இசை இடைவெளியும் இல்லாமல் மாணவ மாணவிகளின் கச்சேரிகள் மேடையில் ரசிகர்களை மகிழ்வித்த வண்ணமிருந்தன.

இன்றை மாலையும் தொடர்ந்து வந்த இரவும் கலந்து கொண்ட அனைவருக்;கு ஒரு வரபபிரசாதமாக இருநதது என்றால் அது மிகையாகாது