- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

‘2 மாதத்தில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்’; நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
ஆலந்தூர்,
கபாலி திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா. இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 28-ந் தேதி மும்பை சென்றார்.
முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து ரஜினிகாந்த் நேற்று மதியம் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மீண்டும் சந்திப்பேன்
காலா படத்தின் படப்பிடிப்பு திருப்திகரமாக இருந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வருகிற 24-ந் தேதி மும்பை செல்ல இருக்கிறேன்.
இன்னும் 2 மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிருபர்கள், ‘தமிழகத்தில் போர் சூழல் ஏற்பட்டு உள்ளதால் அரசி யலுக்கு வருவீர்களா?’ என்று கேட்டனர். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
கடந்த மாதம் ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த்,
ஆலந்தூர்,
கபாலி திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா. இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 28-ந் தேதி மும்பை சென்றார்.
முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து ரஜினிகாந்த் நேற்று மதியம் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மீண்டும் சந்திப்பேன்
காலா படத்தின் படப்பிடிப்பு திருப்திகரமாக இருந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வருகிற 24-ந் தேதி மும்பை செல்ல இருக்கிறேன்.
இன்னும் 2 மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிருபர்கள், ‘தமிழகத்தில் போர் சூழல் ஏற்பட்டு உள்ளதால் அரசி யலுக்கு வருவீர்களா?’ என்று கேட்டனர். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
கடந்த மாதம் ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ‘நான் அரசியலில் ஈடுபடுவது கடவுளின் கையில் தான் உள்ளது. நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கும் ரசிகர்கள் தயவு செய்து ஒதுங்கிவிடுங்கள் என்றும், போர் வரும்போது நாம் பார்த்துக்கொள்ளலாம்’ என்றும் பேசினார்.
அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் இன்னும் 2 மாதங்களில் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன் என்று ரஜினிகாந்த் கூறி இருப்பதால், அந்த சந்திப்பின்போது தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா? என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.