2ம் நாளாக எதிர்க்கட்சிகள் ஆவேசம்: பார்லிமென்ட் மீண்டும் ஒத்திவைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த விவாதத்தை, நடத்தியே தீர வேண்டும்’ எனக்கூறி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் இறங்கியதால், பார்லிமென்டின் இரு சபைகளுமே ஒத்தி
வைக்கப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வுக்காக, நேற்று முன்தினம் கூடிய, பார்லிமென்ட், முதல் நாளிலேயே, அலுவல்களை, முற்றிலுமாக மேற்கொள்ள முடியாமல் தவித்து, அடுத்தடுத்துஒத்திவைப்புகளை சந்திக்க நேர்ந்தது.இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்றும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தை கையிலெடுத்து, ‘விவாதம் கண்டிப்பாக தேவை’ என, மீண்டும், ‘நோட்டீஸ்’ தந்திருந்தனர்.
காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா, திரிணமுல் என, முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், தனித்தனியாக கோரிக்கைவைத்திருந்தனர்.ஆனால், லோக்சபாவின் சபாநாயகர் ஓம்பிர்லாவும், ராஜ்யசபாவின் தலைவர் வெங்கையாநாயுடுவும், அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை.