13வது உலக பண்பாட்டு மாநாடு முன்னிடடு முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு பிறிமா நடனக் கல்லூரி கலையகத்தில் நடைபெற்றது

யாழ்பபாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டை முன்னிடடு இயக்கத்தின் அகிலத்தலைவர் மற்றும் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் வட அமெரிக்க ஒன்றியத்தின் தலைவர் ஆகிய பொறுப்புக்களை வகிக்கும் முக்கிய உறுப்பினர்கள் வாழும் கனடா தேசத்தில் இதன் அங்குரார்ப்பண வைபவத்தையும் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது

அந்த வகையில் நேற்று ஞாயிற்று ்கிழமை மாலை ஸ்காபுறோவில் பின்ச் – மார்க்கம் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள பிறிமா நடனக் கல்லூரி கலையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வுக்கு திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தலைமை தாங்கினார். முக்கிய பேச்சாளர்களாக திருவாளர்கள் வி.சு. துரைராஜா(அகிலத் தலைவர்) சிவா கணபதிப் பிள்ளை (வட அமெரிக்க ஒன்றியத்தின் தலைவர்) ரவிச்சந்திரன் (கனடாக் கிளையின் தலைவர்) திரு தர்மராஜன் (ரெக்னோ மீடியா நிறுவனத்தின் பிரதிநிதி) ஆகியோர் இடம்பெற்றனர்.
மேற்படி நிகழ்வு ஒரு பயனுள்ள வைபவமாக அமைந்தது. ரெக்னோ மீடியா நிறுவனத்திற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைப் பீடம் தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாட்டின் மாநாட்டுத் தலைவராக தமிழ் நாட்டைச் சேர்ந்த முனைவர் பாஞ் இாமலிங்கம் அவர்களை இயக்கத்தின் பொதுக்குழு தெரிவு செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இயக்கத்தின் அகிலத் தலைவராக கனடா வாழ் திரு வி. துரைராஜாவும் செயலாளர் நாயகமாக ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும் சர்வதேச
ஊடகப் பொறுப்பாளராகவும் மாநாட்டின் கனடாவிற்குரிய செயற்பாட்டுக் குழுவின் தலைவராகவும் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் இயக்கத்தின் வட அமெரிக்க ஒன்றியத்தின் தலைவராக கனடா வாழ் திரு சிவா கணபதிப்பிள்ளையும் பணியாற்றுகின்றனர்.
மேலும் நூற்றுக்கணக்கான நிர்வாக உறுப்பினர்களும் தொண்டர்களும் கல்விமான்களும் உலகின் பல நாடுகளிலும் இலங்கையிலும் இந்த மாநாடு வெற்றி பெரும் முகமாக உழைத்து வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இந்த 13வது மாநாடு யாழ்ப் பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதற்கு புதிய துணைவேந்தர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே மாநாட்டுக் குழுவினர் தீவிரமாக பணிகளை ஆற்றத் தொடங்கியுள்ளனர்.
இந்த மாநாட்டை நடத்துவதற்கு சுமார் 40 இலட்சம் இலங்கை ரூபாய்கள் தேவைப்படுகின்றன. இதில் பெரும்பகுதியை எமக்கு வழங்கியுள்ள நிறுவனம் கனடாவில் தமிழ் மகன் திரு மதன் அவர்களால் நிர்வகிக்கபபடும் TEKNO MEDIA INC. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நிறுவனம் தான் இந்த மாநாட்டின் முதன்மை அனுசரணையாளர்கள் TEKNO MEDIA INC என்பது குறித்து நாம் திரு மதன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிககின்றோம்.

கனடாவிற்குரிய மாநாட்டு செயற்பாட்டுக் குழு
தொடர்புகளுக்கு
ஆர். என். லோகேந்திரலிங்கம்- 416 732 1608
வி. துரைராஜா 647 829 4044
சிவா கணபதிப்பிள்ளை 416 899 6044
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் உலகெங்கும் சுமார் 20 நாடுகளில் கிளைகளை அமைத்து சிறப்பாக இயங்கிவருகின்றது. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக ” தமிழச் செம்மல்” ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்கள் இயக்கத்தின் செயலாளர் நாயகமாக தொடர்ச்சியாக இயங்கிவருகின்றார்.
அவருக்கு எமது வாழ்த்துக்கள்