ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் – மத்திய பிரதேச அமைச்சர் பி.சி.சர்மா

மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள சாலைகள் ஹேமமாலினி கன்னம் போல் அழகாக மாறி விடும் என அம்மாநில அமைச்சர் பி.சி.சர்மா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்., அரசு செயல்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் போபாலில் சமீபத்தில் பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறின.

சேதமடைந்த சாலைகள் குறித்து சட்ட அமைச்சர் பி.சி.சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: தற்போது உள்ள சாலைகள் பா.ஜ பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கன்னங்களை போன்று பெரியம்மை வந்தது போல் உள்ளது.

பொதுப்பணித்துறை அமைச்சர் சஜ்ஜன் வர்மா மற்றும் முதலமைச்சர் கமல் நாத்தின் உத்தரவின் பேரில், 15 நாட்களில் சாலைகள் சீரமைக்கப்படும். அதன்பின், நடிகை ஹேமமாலினியின் கன்னம் போன்று அழகாகி விடும். இவ்வாறு பி.சி.சர்மா கூறினார்.