- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ஹேமசிறி பெர்ணான்டோ மீது மனித படுகொலை குற்றச்சாட்டு
இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு வரும் 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பிணை மீதான கோரிக்கையும் அன்றைய தினத்தில் நீதவானினால் ஆராயப்படவுள்ளது.
இந்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் எதிராக தண்டனை சட்ட கோவையில் வழக்கு தொடரப்பட்டுள்ள சட்ட சரத்துக்கள் தொடர்பான விளக்கத்தை சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகே தெளிவூட்டினார்.
அப்போது, இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான சட்ட பின்னணி தொடர்பிலான தெளிவை முன்வைக்குமாறு நீதவான் , பிரதி சொலிஸ்டர் ஜெனரலிடம் கோரியுள்ளார்.
மனித படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமையினால், தண்டனை சட்ட கோவையின் 294ஆவது சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
38 ஆண்டுகளுக்கு பிறகு உயர்தர தேர்வு எழுதவுள்ள இலங்கை அமைச்சர்
தனது தரப்பினர் மீது மனித படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தனது தரப்பினர் எந்தவிதத்திலும் குற்றம் இழைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், கிடைக்க பெற்ற புலனாய்வு தகவல்களின் பிரகாரம், தனது தரப்பினர் தமது கடமைகளை சரிவர செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், புலனாய்வு தகவல்களில் தெளிவாக விடயங்கள் கூறப்பட்டிருந்த போதிலும், போலீஸ் மாஅதிபர் மற்றும் பாதுகாப்ப செயலாளர் ஆகியோர் பெரிய அழிவொன்றை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதாக சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் தேதி மற்றும் நேரம் அறிந்திருந்ட்தது, தற்கொலை தாக்குதல் நடத்தப்படுவது குறித்து அறிந்திருந்து, இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்ட நபர்கள் தொடர்பான சரியான தகவல்களை அறிந்திருந்தது, கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இலக்காக வைக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல்களை அறிந்திருந்தது,
இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை ஜனாதிபதி, பிரதமர், முப்படை பிரதானிகள், பாதுகாப்பு படைகளின் பிரதானிகளுக்கு அறிவிக்காமல் இ்ருந்தது மற்றும் ஏப்ரல் 18,19 மற்றும் 20ஆம் தேதிகளில் கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவல்கள் குறித்து போலீஸ் மாஅதிபர் கவனம் செலுத்தாமல் இருந்தது என்ற விடயங்களை பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
‘போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையால் என் உயிருக்கு அச்சுறுத்தல்’
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் இதன்போது கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.