ஹிந்து பண்டிகை என்பதால் தீபாவளிக்கு பட்டாசு விற்க தடையா ?

கொரோனாவின் தாக்கம் குளிர்காலத்தில் அதிகமாக இருக்ககூடும் எனவும், இதன் காரணமாக வயதானோர் மற்றும் குழந்தைகளின் சுவாசத்திற்கு பிரச்னை ஏற்படுத்த கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதால் அதில் இருந்து வெளியேறும் புகை சுவாச கோளாறை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் காற்று மாசுபாடு குறித்து பட்டாசு விற்பனையை வரும் 7 ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் தடை செய்வது குறித்து டில்லி, உ.பி., ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிடம் கருத்துக்களை கேட்டது.இதில் ராஜஸ்தான் மாநிலம், மற்றும் ஒடிசா மாநிலங்கள் பட்டாசு விற்பனைக்கு தடை செய்ய முடிவு செய்துள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்திலும் பட்டாசு விற்பனைக்குமாநில அரசு தடை விதிக்க வேண்டும் என இந்தி மருத்து சங்கம் (ஐ.எம்.ஏ) கோரிக்கை விடுத்துள்ளது. மாநில அரசுக்கு அவை விடுத்துள்ள அறிக்கையில் மக்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டாசுகள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களை தொடர்ந்து சிக்கிம் மாநிலமும் பட்டாசு வெடிக்க விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.