ஸ்ரீராமானுஜர் நினைவு தபால் தலையை பிரதமர் நாளை வெளியிடுகிறார்; கே.என். ராமச்சந்திரன் எம்.பி. தகவல்

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அவதரித்து வைணவ இறைபணியில் உலகமெல்லாம் சிறந்து விளங்கியவர் ஸ்ரீராமானுஜர். இவருடைய ஆயிரமாவது அவதார பெருவிழா ஸ்ரீபெரும்புதூரில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தை கடந்த 11–ந் தேதி சந்தித்து ஸ்ரீராமானுஜருக்கு நினைவு தபால்தலை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். எனது கோரிக்கையை ஏற்று ஸ்ரீராமானுஜருக்கு நினைவு தபால்தலை வெளியீட்டு விழா நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடக்கிறது. ஸ்ரீராமானுஜர் நினைவு தபால்தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். விழாவில் நான் (கே.என்.ராமச்சந்திரன்), தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை ஆணையாளர் வீரசண்முகமணி ஆகியோர் கலந்துகொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.