‘ஸ்பைடர் மேன்’ போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய வாலிபர்

பாரிஸின் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பாரிசில் மேற்கு ஆஃபிரிக்க நாடான மலியிலிருந்து குடிபெயர்ந்தவர் கசாமா (வயது 22) . அவர் குழந்தையை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலவாக பரவியது.

ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு பால்கனியில் இருந்து மற்றொரு பால்கனிக்கு தாவி, 4 வயது குழந்தையை காப்பாற்றினார்.

இது குறித்து வாலிபர் கூறியதாவது; அது ஒரு குழந்தை என்பதால் நான் செய்தேன். நான் ஏறினேன்… கடவுள் அவருக்கு நன்றி சொன்னேன். ”

கசாமாவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அவரை தன் மாளிகைக்கு அழைத்துள்ளார்.

Leave a Comment