‘ஸ்கெட்ச்’ அப்டேட்: 85% படப்பிடிப்பு நிறைவு; செப். வெளியீடு

‘ஸ்கெட்ச்’ படத்தின் 85% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், செப்டம்பர் வெளியீடாக இருக்கும் என படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
‘வாலு’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கி வருகிறார் விஜய் சந்தர். தமன்னா, ஸ்ரீமன், சூரி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள்.
தமன் இசையமைத்து வரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் 85% படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும், விரைவில் சென்னையில் அரங்கம் அமைத்து பாடல் ஒன்றை படப்பிடிப்பு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
மேலும், இறுதிக்கட்டப் பணிகளை முடித்து செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டது படக்குழு. ‘ஸ்கெட்ச்’ படத்தின் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால், ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கு முன்பாகவே வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.