ஸ்காபுறோ யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆதரவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற Mr & Mrs பல்சுவை விழா

 

 

 

 

 

ஸ்காபுறோ யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆதரவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற Mr & Mrs பல்சுவை விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகர் ரஹ்மான் தனது துணையார் சகிதம் கலந்து சிறப்பித்தார். ஸ்காபுறோ கொன்வென்சன் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி விழாவிற்கு இசைவழங்கினார்கள் “அக்னி:” இசைக் குழுவினர்.
Mr & Mrs என்னும சிறந்த தம்பதியினரை தேர்ந்தெடுக்;கும் போட்டியில் பல தம்பதியினர் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றினர்.
வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ரஹ்மான் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
பல வர்த்தகப் பிரமுகர்கள் மேற்படி நிகழ்ச்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கினார்கள்.
அவர்கள் அனைவரும் மேடையில் நடிகர் ரஹ்மான் அவர்களால் கௌரவிக்கபபட்டார்கள்
யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் அதிபர் திரு யோகி தம்பிப்பிள்ளை மறறும் திருமதி சுபா தம்பிப்பிள்ளை ஆகியோர் தமது நண்பர்களுடன் இணைந்து விழாவை சிறப்பாக நடத்தினார்கள்.
கனடா உதயன் செய்திப்பிரிவு