ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வத்தின் கொடியேற்ற வைபவம்

ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வத்தின் கொடியேற்ற வைபவம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை தொடக்கம் நடைபெற்று மதியம் 11.00 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்கள் ஆலயத்தின் சக சிவாச்சாரியப் பெருமக்கள் சகிதம் அனைத்து கிரியைகள் மற்றும் அபிசேகங்கள் அனைத்தையும் மி;கவும் நேர்த்தியாகவும் வேதாகம விதிப்படியும் ஆற்றினார்கள்.

கொடியேற்றத்தின் உபயகாரர்கள் திரு ரூபன் அரியரத்தினம் தனது துணைவியார் மற்றும் தனது பெற்றோர் சகிதம் அங்கு சமூகமளித்திருந்தார். மற்றும் தேர் உற்சவ உபயகாரர் வர்த்த்கப் பிரமுகர் திரு கணேசன் சுகுமார் வர்த்தகப் பிரமுகர் திரு கேதா நடராஜா போன்றவர்கள் உட்பட பல உபயகாரர்கள் கலந்து சிற்ப்பித்தார்கள்.

ஆயிரத்தை எட்டக்கூடிய பக்தர்கள் அங்கு கலந்து கொண்டு பக்திப் பெருக்கோடு அனைத்து அபிசேகங்கள் மற்றும் பூசைகள் ஆகியவற்றை கண்டு களித்தனர்.

கனடாவி;ல் உள்ள வேறு ஆலயங்களிலிருந்தும் சி;வாச்சாரியப் பெருமக்களும் நிர்வாகிகளும் கலந்து தங்கள் வாழ்த்துக்;களை தெரிவித்தனர்.