ஸ்காபுறோவில் மீண்டும் இளம் தமிழ் உயிர்களைப் பறிக்கும் கொடிய ‘கலாச்சாரம்’ தொடர்கின்றதா?

ஸ்காபுறோவில் மீண்டும் இளம் தமிழ் உயிர்களைப் பறிக்கும் கொடுமை தொடர்கின்றதா? என்;ற அதிர்ச்சி அலைகளை எழுப்பும் கேள்வி தோன்றியுள்ளன. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் எமது சமூகத்தையும் இளைய வயதினைரையும் கதி கலங்கச் செய்த அந்த ‘இருண்ட காலம்’ மீண்டும் உயிர் பெற்று எழுந்து விட்டதா என்ற ஏக்கப் பெருமூச்சும் எம்மைப் பின் தொடர ஆரம்பித்துள்ளன.

கடந்த வியாழக்கிழமை ஸ்காபுறோவில் படுகொலை செய்யப்பட்ட சாரங்கன் சந்திரகாந்தனின் என்னும் தமிழ் பேசும் இளைஞனின் இழப்பு எமது சமூகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இனியும் என்ன நடக்கப்போகின்றன என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஒரு ‘நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய இந்த இளையவனின் இரத்தம் கொடிய துப்பாக்கியின் மூலம் சிந்தப்பட்டது மாத்திரம் அன்நு இடம்பெறவி;ல்லை. அதிலும் பார்க்க மிகவும் பெறுமதி கொண்ட சாரங்கனின் உயிர் என்னும் பொக்கிசமும் கூடவே பறிக்கப்பட்டுள்ளது.

ஒரு விளையாட்டுப் வீரன் வெற்றியையும் தோல்வியையும் சமனான மதிப்பவன் என்பார்கள். ஆனால் மைதானத்தில் பல தடவைகள் வெற்றிகளைக் கொண்டாடியவனுக்கு அன்று கிடைத்தது ‘துப்பாக்கிச் சூடு’ என்னும் பரிசுதான். அந்தப் பரிசைப் பெற்றபோது சாரங்கன் துடித்துப் போயிருப்பான். ஆயிரம் கனவுகளும் ஆயிரம் முகங்களும் அவன் உயிர், உடலை விட்டுப் நீங்குகையில் அவன் முன்னால் தோன்றியிருக்கும். சாரங்கன் இப்போது இவ்வுலகில் இல்லை. ஆனால் அவனது உயிரைப் பறித்தவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டாலும், அவர்களது எதிர்காலமும் இருண்டதாகவே இருக்கும்.

ஏனென்றால் துப்பாக்கிதாரிகளுக்கும் இதயங்கள் உள்ளனதானே!! அவர்களும் சாரங்கனுக்காக நிச்சயம் கண்ணீர் வடிப்பார்கள். அவர்கள் அவ்வாறு கலங்குவதை அவர்களே அறிவார்கள்.

தமது பிள்ளைச் செல்வத்தின் கொடிதான பிரிவினால் தவிக்கும் பெற்றோர்கள் துடித்துப் போயிருப்பார்கள் அல்லவா? அவர்களோடு சேர்ந்து நாமும் கண்ணீரைப் பகிர்ந்து கொள்வோம்.!!