ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா

கடந்த மார்ச் மாதம் 25ம் திகதி ஸ்காபுறோநகரில் நடைபெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்நாட்டிற்குரிய சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட தமிழக அறிஞர் ஈழத் தமிழர்களுக்காக என்றும் குரல் கொடுப்பவர் மற்றும் உலகக் கவிஞர்கள் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா.

கனடாவின் ஸ்காபுறோநகரில் 876 Markham Road என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Fabian’s Cafe’ உணவகத்தின் கூட்டமண்டபத்தில் எதிர்வரும் 30-04-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை மேற்படி நூல்களின் அறிமுக விழா நடைபெறும்.

அறிமுகம் செய்துவைக்கப்படவுள்ள அறிஞரின் நூல்கள் பின்வருமாறு:- சேதுகாப்பியம் 8ம் காண்டம், யேசுஅந்தாதி, தமிழ்ப் பணியில் பெருங்கவிக்கோஆகியனவாகும்.நூல்கள் அறிமுகமும்தேநீர் விருந்தும் அன்றைய மாலை நிகழ்வில் இடம்பெறும். மேலதிக விபரங்களுக்கு:- 416 732 1608 அல்லது 416 752 1524 ஆகிய இலக்கங்களைஅழைக்கவும்.