ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா

காலை தொடங்கி மதியத்திற்கு சற்ற பின்னராக நிறைவுற்ற ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அனைத்து ஏற்பாடுகளையும் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் தனது பரிவாரங்களோடும் தொண்டர்கள் மற்றும் உபயகாரர்களின் உதவியோடும் செய்திருந்தார்.
ஒன்றாரியோ முதல்வர் கெத்தலின் வின் தனது அமைச்சர்கள் பலரோடு அங்கு வருகை தந்தார்.
இரதோற்சவத்தின் உபயகாரர் வர்த்தகப் பிரமுகர் திரு கணேசன் சுகுமார் மற்றும் அவரது சகாக்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
சுமார் 15000 பக்தர்கள் இன்றைய இரதோற்சவத்தைக் கண்டு களிக்கவும் உருகி வணங்கவும் வந்திருநதார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருந்தது.