வேஷ்டியில் வந்து அசத்திய மோடி – சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, வேஷ்டி, சட்டை, தோளில் துண்டுடன் வந்தார்

மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, வேஷ்டி, சட்டை, தோளில் துண்டுடன் வந்தார்.

சீன பிரதமர் ஜின்பிங் – பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதற்காக சென்னை வந்த மோடி, கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். பின்னர், மாலை 4 மணிக்கு, கார் மூலம் மாமல்லபுரம் கிளம்பினார். வழியில், மாணவ, மாணவிகள் மோடியை , தேசிய கொடியை அமைத்து வரவேற்றனர். தமிழக பாரம்பரிய நடன இசை நிகழ்ச்சிகளும் நடந்தன.

வழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதில் தமிழகத்தின் பாரம்பரியமான உடையான, வேஷ்டி, சட்டை மற்றும் தோளில் துண்டு அணிந்தவாறு மோடி, மாமல்லபுரம் வந்தார். அங்கு,மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.

இரண்டு நாள் பயணமாக, சென்னை வந்துள்ள சீன அதிபர் ஸீ ஜின்பிங், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டார். பின்னர் இந்திய பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கிற்கும் இடையே முறைசாரா பேச்சு நேற்று மாமல்லபுரத்தில் நடந்தது.
இதையடுத்து இன்றைய பயணத்திட்டம் விவரம் வருமாறு: