வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவது

பின்ச் அவென்யுவில் அமைந்துள்ள செனக்கா கல்லூரியில் ( SENECA COLLEGE ) நடைபெற்ற கனடிய அரச வைபவம் ஒன்றில் கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு உசேன் அவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவது போன்ற விபரங்களை விளக்கி உரையாற்றினார்.
அங்கு கலந்து கொண்ட மார்க்கம் நகர சபைத் தேர்தலில் 7ம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ் பேசும் வேட்பாளர்களில் ஒருவரான திரு சோதி செல்லா கேள்வி நேரத்தின்;போது கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு உசேன் அவர்களிடம் சில பயனுள்ள கேள்விகளைக் கேட்டார்
அவற்றில் ஒன்று சன்சீ கப்பலில் கனடாவிற்கு அகதிகளாக வந்து இன்னமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள் என்ற அந்தஸ்த்தைப் பெறாத அல்லது நிரந்தர குடியுரிமை பெறாக ஈழத்தமிழர்கள் பெரும் மன வேதனைக்கு உள்ளாகியுள்ளார்களே! அவர்களது பிரச்சனையை தீர்க்க உங்களால் முடியுமா? என்;றார்
அதற்கு பதிலளித்த கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு உசேன் அவர்கள் உரிய அதிகாரிகளினால் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சற்று காத்திருக்க வேண்டி உள்ள்து என்றார்.

Leave a Comment