வெற்றிகளை நோக்கி பயணித்த பெற்றிக் பிரவுணை வெற்றிடத்தில் முடங்க வைத்த 2018

இந்த 2018ம் ஆண்டில் முதல் மாதம் இன்னும் முடிவடையாத நிலையில் அரசியல்வாதிகள் உட்பட அனைவருமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த எஞ்சிய மாதங்கள் சிலருக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டன.
தேர்தல் ஆண்டாக ஒன்றாரியோ மக்களுக்கு சூரியனைக் காட்டவிருந்த 2018 சூனியமாகப் போய்விட்டது பலருக்கு.
பெற்றிக் பிரவுண் என்னும் இளம் தலைவன் குறிவைத்த “ஒன்றாரியோ முதல்வர்” பதவி விலகிப் போய்விட்டது அவரது அருகிலிருந்து.
ஆமாம்! கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஆட்சியைப் பிடிப்பதற்காய் முதலில் அதன் தலைமைப் பதவியைப் பிடிக்கும் நோக்கோடு பாராளுமன்றப் பதவியைத் துறந்த பெற்றிக் பிரவுண் என்னும் இளம் அரசியல்வாதிக்;கு அ ருகிருந்து ஆதரவை வழங்கி அவரை அரியாசனத்தில் ஏற்றி வைக்க காத்திருந்தனர் எமது தமிழ் மக்கள் பலர். மூன்று தமிழ் பேசும் வேட்பாளர்களை கட்சியின் ஆதரவாளர்கள் முடிவு செய்ய, அவர்களை தன்னருகே வைத்து தமிழ்ப் பயணம் செய்த பெற்றிக பிரவுண் இப்போது தனி மரமாய் நிற்பதை சகிக்க முடியாமல் உள்ளது
தமிழ் மக்களின் நிகழ்வுகளுக்;கு அடிக்கடி வருகை தந்து அங்கு சிரித்துப் பேசி நம்பிக்கை கலந்த வார்த்தைகளைப் பகிர்ந்து சென்றமைக்காக நாம் இந்த பக்கத்தை நிரப்பவில்லை, இந்த வாரத்தில்……
எமது கனடா உதயன் அலுவலகத்திற்கு பல தடவைகள் வருகை தந்து எனது படம் 2018ல் யுன் மாதம் உங்கள் அறையை அலங்கரிக்கும் என்ற அழகிய வார்த்தைகளை பகிர்ந்து கொண்டமைக்காக நாம் இந்தப் பக்கத்தை கையில் எடுக்க அவருக்காக நிரப்பவில்லை.
பதுங்கிய வண்ணம் காத்திருந்த மோசமானதும் கூரியவையுமாகிய குற்றச்சாட்டுக்கள் கனிகள பறிக்கக் காத்திருந்தவரின் கைகளை குத்திக் குதறிவிட்டன. என்பதை காட்சிகளாகவும் எழுத்துக்களாகவும் தெரிந்து கொண்டபோது, தேம்பி அழுதவரில் நாமும் இருந்தோம். குற்றச்சாட்டுக்கைள அலசிப் பார்பபதற்கு எமக்கு துணையாக எதுவுமே இல்லை. அவற்றை கவனிக்க கனடிய சட்டப் பிரிவு சரியான நேரத்தில் வந்து விடும்.

ஆனால் தட்டித் தட்டி கதவுகளை தமிழின் துணையாக நிற்பேன் என்றவர் தவித்து நிற்கையில், நாம் எப்படி மகிழ்நதிருக்க முடியும்? என்னிடத்தில் ஒன்றாரியோவை ஒப்படையுங்கள். உங்களுக்கு மாற்றங்களைக் காட்டுகின்றேன் என்றவருக்கு காலம் கரடான பாதையை காட்டியது, சென்று வா மகனே என்று.
ஒன்றாரியோவின் தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவரின்; பதவி விலகல் தொடர்பாக இன்று காலை தனது கருத்துக்களை ஊடகங்களோடு பகிர்ந்து கொண்ட போது அவரது முகத்திலும் அதிர்ச்சியும் சோகமும் கலந்து நின்றன என்பதைக் கண்டோம்.
பெற்றிக் பிரவுணின் கரங்களை பற்றி கைகுலுக்கியவர்கள் அவரது கரங்களுக்காக மீண்டும் காத்திருக்கலாம். ஆமாம்! காத்திருப்பு என்பதும் கடினமானதே!