Go to ...
Canada Uthayan Tamil Weekly
* ‛பயங்கரவாதத்தை வேரறுப்போம்': டிரம்ப்-மோடி சபதம்    * சீனாவை எதிர்க்கும் கருவியாக இந்தியாவை அமெரிக்கா பயன்படுத்துகிறது சீனா விமர்சனம்    * 'இன்னொரு ரசாயன தாக்குதல் நடந்தால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்' சிரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Tuesday, June 27, 2017

விவேகம் படத்தில் அஜித் சாதனை பாடல்


அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஜித் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில் ‘தீம்’ பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். இதில் அவருடைய சாதனைகள் பற்றிய வரிகள் உள்ளன. இந்த பாடலுக்காக அனிருத் பல ராகங்களை போட்டு காட்ட, அதில் ஒரு ராகத்தை அஜித் தேர்ந்தெடுத்துள்ளாராம். அது ‘தீம்’ பாடலாக உருவாகி இருக்கிறதாம். அதிரடி இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கும் என்று அனிருத் அடித்துச் சொல்கிறார்.

இதற்கிடையில், வருகிற 19-ந் தேதி விவேகம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார். அதற்கான டீசரை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நேற்று 12 மணிக்கு இப்படத்தின் சர்வைவா என்ற பாடலின் 25 நொடி மேக்கிங் டீசர் வெளியானது. 10 நிமிடத்தில் 1 லட்சம் Views பெற்றது. ஒரு மணிநேரத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் Viewsகளையும், 30 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்தது. தற்போது வரை 1,077,379 Viewsகளையும் 79 லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

டீசரை விட குறைவான ஹிட்ஸ் என்றாலும் பாடல் டீசரை பொறுத்தவரை இதுதான் அதிகபட்சம். அநேகமாக, அஜித்தின் சாதனைகளை சொல்லும் பாடலாக அதுவாகத்தான் இருக்குமோ? என்ற ஐயமும் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

விவேகம் டீசர் தற்போது பிரமாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது, இதுநாள் வரை வெளிவந்த தமிழ் டீசர்களிலேயே அதிக ஹிட்ஸ் கபாலி தான்.அடுத்து விவேகம் டீசர் இடம்பெற்று உள்ளது. அடுத்த இடத்தில் விஜயின் பைரவா உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2