விழுப்புரத்தில் தொண்டர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் பங்கேற்று தொண்டர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று விழுப்புரத்தில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். காலை 10 மணி முதல் பிற்பகல் 3.15 மணிவரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரூ.50 செலுத்தி அனுமதி சீட்டு பெற்ற பின்பே அரங்கில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் விஜயகாந்த் மைக் பிடித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.