விறுவிறு கட்டத்தில் 2வது டெஸ்ட்

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்றைய கடைசி நாள்ஆட்டத்தில்

இந்திய பவுலர்கள் கைகொடுக்கும் பட்சத்தில் சுலபவெற்றி பெறலாம். 405 ரன்கள் என்ற கடின இலக்கைதுரத்தும் இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர்குக் அரைசதமடித்து ஆறுதல் தந்தார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல்டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது போட்டிவிசாகப்பட்டனத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 455, இங்கிலாந்து 255ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி இரண்டாவதுஇன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (56), ரகானே (22)அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தஇந்திய அணிக்கு, ஸ்டூவர்ட் பிராட் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ ரகானே (26),அஷ்வின் (7) அவுட்டாகினர். அடில் ரஷித் ‘சுழலில்’ சகா (2) சிக்கினார். பொறுப்பாகஆடிய கேப்டன் கோஹ்லி 81 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஷித் பந்தில் ஜடேஜா (14),உமேஷ் யாதவ் (0) சிக்கினர்.

ஷமி அதிரடி: பின் இணைந்த ஜெயந்த் யாதவ், முகமது ஷமி ஜோடி சற்று அதிரடிகாட்டியது. ரஷித் வீசிய 56வது ஓவரில் ஷமி ஒரு சிக்சர் அடித்தார். ஸ்டோக்ஸ் வீசிய63வது ஓவரில் ஜெயந்த் இரண்டு பவுண்டரி விளாசினார். மொயீன் அலி பந்தில் ஷமி (19)ஆட்டமிழந்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. ஜெயந்த் (27) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் பிராட்,ரஷித் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கு: இதனையடுத்து 405 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன்இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. கேப்டன் அலெஸ்டர் குக்,ஹமீது ஜோடி துவக்கம் முதலே நிதானமாக விளையாடியது. இவர்களை பிரிக்கஇந்திய கேப்டன் கோஹ்லி எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.பொறுப்பாக ஆடிய குக் 171வது பந்தில் அரைசதம் கடந்தார். முதல் 50 ஓவர் வரை ஒருவிக்கெட் கூட வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். ஒருவழியாகஅஷ்வின் ‘சுழலில்’ ஹமீது (25) சிக்கினார். பின் வந்த ஜோ ரூட்டும் நிதானம் காட்டினார்.ஜடேஜா பந்தில் குக் (54 ரன், 188 பந்து) அவுட்டானார்.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 2விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் (5) அவுட்டாகாமல் இருந்தார்.

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், இந்தியாவின் வெற்றி பவுலர்கள் கையில் தான்உள்ளது. இங்கிலாந்து அணியின் மீதமுள்ள 8 விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள்விரைவில் கைப்பற்றினால் சுலப வெற்றி பெறலாம்.

ரசிகர்கள் கூட்டம்

நேற்று விடுமுறை நாள் என்பதால், போட்டியை காண அதிகளவில் ரசிகர்கள்வந்திருந்தனர். மொத்தம் 22 ஆயிரத்து 507 பேர் கண்டுகளித்தனர்.

‘சேஸ்’ செய்ய முடியுமா

இந்திய மண்ணில் நான்காவது இன்னிங்சில் அன்னிய அணி என்ற முறையில், வெஸ்ட்இண்டீஸ்தான் அதிகபட்சமாக 276 ரன்களை (டில்லி, 1987) ‘சேஸ்’ செய்து வென்றது.இந்திய மண்ணில், இங்கிலாந்து அணி 4வது இன்னிங்சில் 241 ரன்களை ‘சேஸ்’ செய்தபோட்டி ‘டிராவில்’ (சென்னை, 1964) முடிந்தது.

256

ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் கோஹ்லி4வது இடம் பிடித்தார். இவர் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 248 ரன்கள் (167+81)குவித்தார். முதல் மூன்று இடங்களில் கவாஸ்கர் (289, எதிர்–வெ.இண்டீஸ், 1978),கவாஸ்கர் (278, எதிர்–வெ.இண்டீஸ், 1978), கோஹ்லி (256, எதிர்– ஆஸி., 2014) உள்ளனர்.

இது சரியா ஜடேஜா

நேற்றைய ஆட்டத்தின் 47வது ஓவரை பிராட் வீசினார். இதன் 3வது பந்தை ஒருரன்னுக்கு தட்டி விட்ட ஜடேஜா, ஆடுகளத்தின் நடுப்பகுதியில் ஓடினார். கிரிக்கெட்விதிமுறைப்படி இப்படி ஓடுவது தவறு. ஆடுகளம் சேதம் அடைய வாய்ப்பு உண்டு.இதனால், அம்பயர் ரோட் டக்கர் (ஆஸி.,) ஜடேஜாவை அழைத்து ‘நட்பு ரீதியில்’எச்சரிக்கை செய்தார்.

கடந்த அக்டோபரில் நடந்த இந்துார் டெஸ்டில் இதே தவறை இரு முறை ஜடேஜாசெய்தார். இதனால் நியூசிலாந்து அணிக்கு 5 ரன்கள் உதிரியாக வழங்கப்பட்டது. இவர்,இதே தவறை மீண்டும் செய்தால், ஒரு போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்படலாம்.

ஸ்டோக்ஸ் அசத்தல் ‘கேட்ச்’

இங்கிலாந்தின் ரஷித் வீசிய 47வது ஓவரின் முதல் பந்து, கோஹ்லியின் ‘பேட்டில்’ பட்டுசென்றது. இந்த நேரத்தில், ‘சிலிப்’ பகுதியில் நின்றிருந்த ஸ்டோக்ஸ் துடிப்பாகசெயல்பட்டார். இவர் அந்தரத்தில் தாவி ஒற்றை கையால் பந்தை பிடித்தார். கோஹ்லி(81) சத வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

டி.ஆர்.எஸ்., குழப்பம்

நேற்றைய ஆட்டத்தில் ‘டி.ஆர்.எஸ்.,’ (அம்பயர் முடிவு மறுபரிசீலனை) முறையில்மிகப்பெரிய குழப்பமே ஏற்பட்டது. ரஷித் வீசிய 43வது ஓவரின் முதல் பந்தில் சகாவுக்குஎல்.பி.டபிள்யு., முறையில் அம்பயர் தர்மசேனா (இலங்கை) அவுட் தந்தார். இதற்கு சகாஅப்பீல் செய்தார். டி.ஆர்.எஸ்., முறையில் பார்த்தபோது, பந்து ‘பிட்ச்’ ஆனது ‘அவுட்சைடு’ என தெரியவந்தது. இதனால், களத்திலிருந்து அம்பயரின் முடிவுக்குவிட்டுவிடுவாக தெரிவிக்கப்பட்டது. சகாவும் ஏமாற்றத்தில் திரும்பினார். இதேமுறையில், 44.2 ஓவரில் பிராட் வீசிய பந்தில் கோஹ்லிக்கு எல்.பி.டபிள்யு.,கேட்கப்பட்டது. அம்பயர் தர மறுக்க, இங்கிலாந்து அணி அப்பீல் செய்தது.இம்முறையும், களத்திலிருந்த அம்பயரின் முடிவுக்கு விட்டுவிட, கோஹ்லி தப்பினார்.

வீணான வாய்ப்பு

ஜடேஜா வீசிய 46வது ஓவரின் 4வது பந்தில் இங்கிலாந்தின் குக்கிற்கு அம்பயர்தர்மசேனா எல்.பி.டபிள்யு., தர மறுக்க, இந்தியா அப்பீல் செய்தது. ஆனால், ‘டிவி’அம்பயர், களத்திலிருந்து அம்பயரின் முடிவுக்கு விட்டுவிட, இந்தியாவின் டி.ஆர்.எஸ்.,வாய்ப்பில் ஒன்று வீணானது. மீண்டும், அடுத்த ஓவரின் 4வது பந்தில் இதே போல, குக்அவுட்டில் சந்தேகம் ஏற்பட்டது. பவுலர் அஷ்வின், கேப்டன் கோஹ்லியை வற்புறுத்திஅப்பீல் செய்ய வைத்தார். ஆனால், இதற்கும் ‘டிவி’ அம்பயர் அவுட் தர மறுக்க, இந்தியஅணியின் இரண்டு வாய்ப்பும் வீணானது.

 

2

கடந்த 2000க்குப்பின் இந்திய மண்ணில் நடந்த டெஸ்டில், ஒரு அணியின் 2வதுஇன்னிங்சில் 50 ஓவருக்கு அதிகமாக ‘பார்ட்னர்ஷிப்’ அமைத்த ஜோடிகள் வரிசையில்குக், ஹமீது இரண்டாவது இடம் (50.2) பிடித்தனர். முதலிடத்திலும் இதே ஜோடியே (58.4)உள்ளது. இந்த இலக்கை கடந்த ராஜ்கோட் டெஸ்டில் எட்டியிருந்தது.

11

டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்சில் அதிக முறை (11), 50 அல்லது அதற்குமேற்பட்ட ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் குக் 4வது இடம் பிடித்தார்.ஏற்கனவே, வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால்(13), கெய்ல்(13), தென் ஆப்ரிக்காவின் கிரீம்ஸ்மித்(13), இந்தியாவின் கவாஸ்கர்(12), இங்கிலாந்தின் மைக் ஆதர்டான் (11) இந்தஇலக்கை எட்டியிருந்தனர்.

171

இங்கிலாந்தின் குக்கிற்கு, அதிக பந்தில் (171) அரைசதம் அடித்த போட்டியாக இதுஅமைந்தது. இதற்கு முன், இலங்கை (2012, கொழும்பு) ஆஸ்திரேலியா (2013,நாட்டிங்காம்) அணிகளுக்கு எதிராக தலா 164 பந்தில் அரைசதம் அடித்திருந்தார்.

4

டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்சில் குறைந்த வயதில் (19) 100 பந்துகளுக்குஅதிகமாக எதிர் கொண்ட 4வது வீரரானார் (144 பந்து) இங்கிலாந்தின் ஹமீது. இதற்குமுன், பாகிஸ்தானின் ஜாகித் பாசல், வங்கதேசத்தின் நபிஸ் இக்பால்,ஆஸ்திரேலியாவின் ஆர்ச்சி ஜாக்சன் இந்த சாதனையை எட்டியிருந்தனர்.

13

இத்தொடரின் முதலிரண்டு போட்டியை சேர்த்து, இங்கிலாந்தின் ரஷித் 13 விக்கெட்வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், இந்திய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிகவிக்கெட் கைப்பற்றிய 7வது அன்னிய ‘லெக் ஸ்பின்னர்’ என்ற பெருமை பெற்றார்.

140

ஆசிய கண்டத்தில் நடந்த டெஸ்டின் 4வது இன்னிங்சில் இங்கிலாந்து அணிஅதிகபட்சமாக 140 ஓவரை (எதிர்–இலங்கை, கண்டி, ‘டிரா’, 2003) எதிர் கொண்டுள்ளது.