- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை
தமிழீழ விடுதலைப் புலி கள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன் நேற்று முன்தினம் புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
வில்பத்து தேசிய சரணா லயத்துக்குள் கிளைமோர் குண்டை வெடிக்கச் செய்து, மருத்துவர் உள்பட 7 பேரை கொலை செய்த குற்றத்தை ஏற்றுக் கொண்டனர் என்று கட்டளை வழங்கிய மேல் நீதிமன்றம் 7 பேருக்கும் இந்தத் தண்ட னையை வழங்கியது.மன்னார், சாவகச்சேரி, வவுனியா, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் இந்த தண்டனையை பெற்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிமியன் சந்திரயோகி, சிறில் இராசமணி, முத்து மரிக்கார் அப்துல் சலீம், சின்னப்பன் பாக்கியநாதன், சாந்தன் ஸ்ரேனிஸா ரமேஸ்;, இராகவன் சுரேஸ்; மற்றும் பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் அவர்களில் அடங்குகின்றனர். அவர்கள் 7 பேரும் 2011ஆம் ஆண்டு முதல் சிறைகளில் 8 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
சதித்திட்டம், பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டமை, 7 பேரின் உயிப்புக்காரணமாகவிருந்தமை உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் 7 பேர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.சந்தேகநபர்களின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதடிப்படையிலேயே அவர்களுக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பி;டத்தக்கது.