- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

விடிய விடிய மழை சென்னை நகரில் வெள்ளப்பெருக்கு ; மழை விபத்துகளில் 3 பேர் பலி
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே மையம் கொண்ட வளிமண்டல மேலடுக்கு தொடர்ந்து நீடிப்பதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னை தாம்பரத்தில் அதிகபட்சமாக 18 செ.மீ மழையும், செம்பரம்பாக்கம் ஏரி அருகே 17.6 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மீனம்பாக்கத்தில் 16.9 செ.மீ மழையும், புழல் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தில் 14.5 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தொடர் மழை காரணமாக பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று ஒருநாள் பெய்த கனமழையால் சென்னை தாம்பரத்தில் மட்டும் 18 செ.மீ மழைப் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் ஒரே நாளில் 1.5 அடி உயர்ந்து உள்ளது.
சிட்லபாக்கம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது; அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி.
வியாசர்பாடி ஜீவா சுரங்கப்பாதையில் பல அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி உள்ளது இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
முடிச்சூரில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்ததையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மழை மீட்பு பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார். 190 மீட்பு படகுகள், 176 நிவாரண முகாம்கள், 4 பொது சமையல் கூடங்கள், 44 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்து உள்ளது.
கனமழையால் ஆரணி அருகே லாடப்பாடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து
9-ம் வகுப்பு மாணவி நித்யா உயிரிழந்துள்ளார்.
சென்னை உள்பட 7 மாவட்டங்களில், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – புதுச்சேரியிலும் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.