விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் : முத்தையா முரளிதரன் பயோ பிக் – 800ன் எதிரொலி !!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளங்களில் கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இலங்கை அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‛800′ ல் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் இருந்து விலகிக்கொள்ளும்படி பல பிரபலங்கள் விஜய் சேதுபதியிடம் தெரிவித்தனர். முத்தையா முரளிதரனே, தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும் என அறிக்கை விட்டார். இதனையடுத்து விஜய்சேதுபதியும் படத்தில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரித்திக் என்பவர், விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிகவும் வக்கிரத்துடன் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.