- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

விகாரைகளுக்கு சென்று வழிபட்டாலும் ஜனாதிபதி மைத்திரி பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார் என்கிறார் உயன்கொட
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்த அதிகாரத்தையே முறையற்ற விதத்தில் செயற்படுத்துகின்றார்.அத்துடன் அவர் விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும்; பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். மனிதனுக்கு காணப்பட வேண்டிய சாதாரண குணங்கள் அனைத்தையும் புறந்தள்ளி செயற்படுகின்றார். என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜயதேவ் உயன்கொட தெரிவித்துள்ளார்.
மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு தின நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். மனிதனுக்கு காணப்பட வேண்டிய சாதாரண குணங்கள் அனைத்தையும் புறந்தள்ளி செயற்படுகின்றார்.
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதாகவும், ரணிலை பிரதமராக்குவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி இப்போது அனைத்தையும் மறந்து, நிறைவேற்றதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜயதேவ் உயன்கொட தெரிவித்துள்ளார்.