விஎச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

விஎச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் அதிமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத்தின் (விஎச்பி) ராமராஜ்ஜிய ரத யாத்திரை தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த ரதயாத்திரை தமிழகத்தின் பல பகுதிகளுக்களிலும் செல்ல திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது. இவ்விவகாரம் இன்று தமிழக சட்டசபையில் எதிரொலித்தது. தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தடை விதிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர சபாநாயகர்அனுமதி மறுத்தார். இதனால் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, அபுபக்கர் ஆகிய எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கினால், கலவரங்கள் ஏற்படும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என அவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இப்போது திமுக விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் அதிமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என
வலியுறுத்தி உள்ளது.
இந்துத்துவா அமைப்புகளை எச்சரித்து அரசியல் சட்டப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கை விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை மேற்கொள்கிறது. விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை தமிழகத்திற்குள் மீறி நுழைந்தால் கைது செய்து உத்தரப்பிரதேசத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என கூறிஉள்ளார் மு.க. ஸ்டாலின்.