- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

வாள்,கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஒப்படைக்கும்படி பொதுமக்களுக்கு கெடு
வாள்,கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஒப்படைக்கும்படி பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட கெடுவை மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் சமீபத்தில் தேவாலயங்கள்,நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட எட்டு இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. குண்டு வெடிப்பை தொடர்ந்து இலங்கையில் பல இடங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு உதவுவோரை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் போலீசார் நடத்திய சோதனைகளில் பல இடங்களில் வாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து ‘பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள வாள் மற்றும் நீளமான கூர்மையான ஆயுதங்கள் அனைத்தையும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க வேண்டும்’ என அரசு உத்தரவிட்டது.
ஏராளமானோர் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைத்தனர். இந்த கெடு முடிந்த நிலையில் மேலும் 48 மணி நேரத்துக்கு கெடுவை நீட்டித்து இலங்கை அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே குண்டு வெடிப்பால் பதற்றம் நிலவிய நீர்க்கொழும்பு பகுதியில் நிலைமை சீரடைந்துள்ளதை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டது. நாடு முழுவதும் இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.