வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப ஹோமத்தில் கனடா நாட்டு உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை என்றாலே ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் என்றுதான் அனைவரின் நம் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது எனலாம். ஆரோக்ய பீடத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானான நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும், ஆரோக்ய லக்ஷ்மி தாயாருக்கும், இதர 75 பரிவார மூர்த்திகளுக்கும் பக்தர்களின் தேவைகளுக்காக நிவர்த்திக்காக யாகங்கள், ஜபங்கள் வைபவகமாக அனுதினமும் நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு கோடி ஜப யக்ஞமும், அர்ச்சனையும், மஹாபிஷேகமும் உலக நன்மை கருதியும், மக்கள் வாழ்வாங்கு வாழவும் தன்வந்திரி குடும்பத்தினர்கள் பங்கேற்று நட்த்தும் விதமாக, மிகச் சிறப்பாக மாபெரும் கோடி ஜப ஹோமம் சென்ற 19.07.2018 முதல் 28.10.2018 வரை வைபவமாக வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வைபவத்தின் 12 வது நாளான இன்று நடைபெற்ற கோடி ஜப தன்வந்திரி வேள்வியில் கனடா நாட்டின் பிரபல பத்திரிகையான கனடா உதயன் பத்திரிகையின் ஆசிரியர் திரு. லோகன். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இக்கோடி ஜப தன்வந்திரி யாகத்தின் மூலம் நற்குழந்தைப் பேறு, பாலாரிஷ்ட தோஷ நிவர்த்தி (குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்குதல்), குழந்தைகளின் கல்வி மேம்பாடு,நல்ல ஞாபக சக்தி, தேர்வுகளின் நன்மதிப்பெண்கள் பெறுவது, கற்ற கல்விக்கேற்ற உத்யோகம்,உத்யோக உயர்வு, வியாபாரத்தில் பெருலாபம், சுப திருமண யோகம், நல்ல இல்லற வாழ்க்கை, நோயற்ற நீடித்த நல்வாழ்வு, வம்ச அபிவிருத்தி, ஸகல ஸெளபாக்கியங்கள், பித்ரு தோஷ நிவர்த்தி, முன்னோர்கள் பூரண ஆசீர்வாதம், நவக்ரஹ ஜாதக தோஷ நிவர்த்தி மற்றும் வேண்டும் வரங்களை மிக விரைவில் வழங்கிடும்

மேலும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வலம் வந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளையும் இதர 75 பரிவார மூர்த்திகளையும் தரிசித்து ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று சென்றார். அவருக்கு பீடத்தின் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.