வாட்சப்பிற்கு போட்டியாக பதஞ்சலியின் கிம்போ : பாபா ராம்தேவ் அறிமுகம்

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், வாட்சப் செயலி(app)க்கு போட்டியாக, கிம்போ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் திஜாராவாலா, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த கிம்போ செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். எங்களது சுவதேசி மெசேஜிங்பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டு, இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலவச தொலைபேசி அழைப்புகள், வீடியோ காலிங் வசதிகளோடு மட்டுமல்லாது ஆடியோ, போட்டோஸ், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், குயிக்கீஸ், லொகேசன், ஜிப், டூடூல் உள்ளிட்ட வசதிகள் அடங்கியதாக இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதஞ்சலி நிறுவனம், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது வாட்சப்பிற்கு போட்டியாக, கிம்போ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.