- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

வவுனியாவில் கொலை வழக்கொன்றில் 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி
வுனியா –ஸ்ரீராமபுரத்தில் ஒருவரைக் கொலை செய்த 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரனால் மரண தண்டனை விதித்து கடந்த செவ்வாய்கிழமையன்று தீர்ப்பளிக்கப்பட்டது.2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.கொலை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சட்ட மா அதிபரால் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இரண்டாம் , மூன்றாம் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படாமையால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.முதலாவது பிரதிவாதிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு அன்றைய தினம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.