வருமானவரி சோதனையில் சிக்கிய ராமமோகனராவுக்கு மீண்டும் பதவி

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது தலைமை செயலாளராக பதவி வகித்தவர் ராமமோகனராவ்.

அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி வருமானவரி துறையினர் திடீரென சோதனை நடத்தினர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனையடுத்து ராமமோகன ராவ் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

கடந்த 3 மாதங்களாக எந்த பதவியிலும் இல்லாமல் இருந்த ராமமோகனராவ் தற்போது புதிய பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில், தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை முதன்மை செயலர் மற்றும் இயக்குனராக இருந்த கே.ராஜாராமன் நில நிர்வாக துறை முதன்மை செயலர், ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.