வந்தார்! வென்றார்! சென்றார் வடக்குக்கு…முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்குமாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்களது அரசியல் பிரவேசம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தபோது இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது,வேற்றின மக்களும்,மேலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களும்மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். தொடர்ச்சியாக வந்த அவரது தேர்தல் வெற்றியும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மாகாண சபை நிர்வாகம் பற்றி யெல்லாம் அறிந்து கொள்வதற்கு.
திரு விக்னேஸ்வரன் அவர்களை நீதியரசர் விக்னேஸ்வரன் என்றுதான் நாம் அழைத்தோம். முன்னர் அவர் உயர் நீதிமன்ற நீதியரசராக பணியாற்றிய காரணத்தால் அவர் அவ்வாறு மரியாதையாக அழைக்கப்பட்டார். பதவியில் இருந்தபோதும் பின்னர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின்னரும் அவர் அங்கு இந்து மாமன்றம் போன்ற பலபலமிக்க இந்து மதம் சார்ந்த அமைப்புக்களில் முக்கியபதவிகளை வகித்தார். அதன் மூலம் இந்து மக்களுக்கு அளப்பரியசேவைகளைச் செய்தார்.
நீதியின் உறைவிடமாக இருந்த அவரை அரசியலுக்கு “இழுத்துவந்த” தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு இரா சம்பந்தன் அவர்களுக்கு நாம் இந்த நேரத்தில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.சிறந்த மொழிப்பற்றும் இனப்பற்றும் கொண்டவராக இருப்பது மட்டுமல்ல,தமிழ் மற்றும் ஆங்கிலம் அத்தோடு ஆட்சிமொழியான சிங்களத்தையும் சரளமாகப் பேசித்தீர்க்கும் வல்லமை கொண்டவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள். பலமொழி வல்லவரானஅவர் எந்த இடத்திற்குச் சென்றாலும் தனது சாதுரியத்தால் வெற்றிகளைப் பெற்றவர் என்பதற்கு பலசான்றுகள் உள்ளன. மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் முதலமைச்சர் பதவியைப் பயன்படுத்தி,அதன் மூலம் வடக்குமக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றிவரும் அவர் தென்னிலங்கைஅரசியல்வாதிகளோடுஉரையாடல்களைநடத்திபலவிடயங்களைச் சாதித்தவர்.
சிலநாட்களுக்;கு முன்னர் கொழும்பில் ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனாவைச் சந்திக்கஅழைக்கப்பட்ட இலங்கையின் மாகாணமுதலமைச்சர்களில் திருவிக்னேஸ்வரன் அவர்களும் ஒருவராக இருந்துதனதுபொறுப்புக்களைஉணர்ந்துஅங்குஉரையாடினார். சிங்களமொழியில் வல்லவரானஅவரால் மட்டுமேஅங்கு ஏனைய முதலமைச்சர்களோடுஜனாதிபதிஎன்னவிடயங்களைஉரையாடுகின்றார் என்பதைசெவிமடுக்கமுடிந்திருக்கும்.
மேற்படிசந்திப்பில் எமதுமுதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வடக்குமாகாணத்திற்குஒதுக்கப்படும் நிதிகாலக்கிரமத்தில் வந்துசேராத விடயத்தை ஜனாதிபதியிடம் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய விடயங்களை கவனமாக செவிமடுத்த ஜனாதிபதிமைத்திரிஅவர்கள் உடனேயேதனதுஅரசாங்கத்தில் நிதியமைச்சராகஉள்ளதிருரவிகருணாநாயக்காவைதனதுஅலுவலகத்திற்குஅழைத்துமுதலமைச்சர் அங்கு இருக்கக் கூடியதாகவே உடனடியாக நிதியை ஒதுக்கவேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொண்டார். இதனால் இரண்டு நாட்களிலேயே வடக்கு மாகாணத்தின் திறை சேரிக்கு ஐந்நூறு மில்லியன் ரூபாய்கள்  அனுப்பப்பட்டுள்ள செய்தியை வடக்குமாகாண திறைசேரியின் பொறுப்பதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த விடயத்தில் முக்கிய விடயம் என்னவென்றால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் மேற்படி நிதியையோ அன்றி வேறு உதவிகளையோ பெறுவதற்கு பலமிக்க எதிர்க்கட்சியாக விளங்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரிடமோடு அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களிடமோ எவ்விதமான உதவியையும் கோரவில்லை என்பது இங்குகுறிப்பிடத்தக்கது. வடக்கின் முதலமைச்சர்pன் சாதுரியத்திற்கும் சவால்களை வெற்றிகொள்ளும் திறனுக்கும் உலகெங்கும் உள்ளதமிழ் மக்களும் தாயகத்தில் இடர்களுக்கு இடையில் வாழ்ந்துவரும் எமதுஉறவுகளும் என்றுமே நன்றியுடையவர்களாகவும் பாராட்டும் மனங்கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதேஎமதுஅவா!

தொன்னூறு வயதிடம் விடைபெற்றதோழனே! சென்றுவா

மலையன்பன்

editorial-02-12-2016

தொன்னூறு வயதிடம் விடைபெற்றதோழனே! சென்றுவா உலகைவென்றவனே

உன்னை நேசித்த உலகார்ந்த தோழர்களுக்கும் உன் தேசத்துமக்களுக்கும் கைகளை அசைத்து அமைதியாய் விடைபெற்றாய் பிடல்..

உடலை மண்ணுக்கும் உன்னத கொள்கைகளை மக்களுக்கு மாகவிட்டு சென்ற தோழா.

கொம்யுனிசம் என்னும் நெம்புகோலால் உலகை திருப்பலாம் என்று முயன்ற பெருந்தலைவர்களைப் பின்ப ற்றினாய்.

இதயத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குணமும்

கைகளில் துப்பாக்கியும் உதட்டில் புகை தள்ளும் சுருட்டும் தாங்கியதோழன்

சேகுவேரா……. புரட்சிக்கு கைகொடுத்த பலத்தோடு நீயும் உன் தோழர்களும் திடம் கொண்டு வெற்றியின் வரம் பெற்றீர்கள்

ஆழப் புரட்சி செய்து ஆயிரக்கணக்காய்

தோழர்களை இழந்து அமெரிக்காவின்

ஏவல்களை அகற்றி

அழகுமிகு கியுபாவை அரியாசனத்தில் ஏற்றினாய்

அன்னை தேசம் கியுபாவையாவது அசைக்கவும் அதனை தொடர்ந்து ஆளவும் முடிந்தது உன்னால் ஆமாம் உன் அருகில் மக்கள் இருந்ததனால்ஏ மாந்தனர் உன் எதிரிகள் பலதடவை

நேற்று உன்னை இயற்கை அழைக்க… நீ விடைபெற்றுச் சென்றாய் எம்மைவிட்டு…

ஆனால் எத்தனை தடவைகபடமும் சதியும்

உன்னை காவு கொள்ள முயன்றது?

உலகின் எசமானார்களாம் அவர்கள்

வீரனாம் உன்னை குறிவைத்து ஏவினர் ஏவினர் ஒரங்கட்ட முடியாமல்

இறுதியில் ஏகினர்…

இன்று நீ அமைதியாய் உறங்குகின்றாய்

உன் நாமத்தை சொன்னால் நடுங்கும் உலகத்தில்

நான்கு திசையிருந்தும் சோகத்தின் முனகல் கேட்கிறது

மறுபக்கத்தில் தூற்றும் பலர் கோழைகள்

கொக்கரிக்கின்றார்கள்..

கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை

உன் இருப்பில் நாம் தர்மத்தைப் பூசித்தோம்

உன் பிரிவிலும் நாம் புரட்சியின் சுகந்தத்தைசுவாசிக்கின்றோம்

உன்னை நேசித்த மக்களோடு நாமும்

ஒன்றாய் நின்று உரத்துகுரல் கொடுப்போம்

“சென்றுவாபிடல்! உன் உடல் மண்ணுக்கு

உயிர், நீ நேசித்த கியுபா என்னும் கீரிடத்திற்கு”

மலையன்பன்

 


வேலைவாய்ப்பு

ஸ்காபுறோவில் நல்லநிலையில இயங்கிவரும் வாராந்தப் பத்திரிகைஅலுவலகத்தில் பின்வரும் பகுதிநேரவேலைவாய்ப்புக்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்லஅறிவுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். இதுதொடர்பானநேர்முகப் பரீட்சையும் இடம் பெறும்.  அத்துடன் கொம்பியூட்டர் தொடர்பானவிடயங்களும் அவசியம்.
1 Type Setters and Layout staff
2 Reporters
3 Office Assistant
4 Marketing Representatives
மேலதிகவிபரங்களுக்கு 416 732 1608 என்னும் இலக்கத்தைஅழைக்கவும்