வட மாகாண சுகாதாரஅமைச்சருக்கு எதிராகவும் காணாமற் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

காணாமற் போனோரின் உறவினர்கள் சிலவாரங்களுக்கு முன்னர் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் செய்தபோது, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் அவர்களது உருவப்படத்தை தீவைத்து கொழுத்தினர் என்ற செய்தி மறையும் முன்னதாகவே,நேற்று முன்தினம் வவுனியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் திரு ப. சத்தியலிங்கத்திற்கு எதிராகவும் மேற்படி காணமற் போனோரின் உறவினர்கள் கோசங்களை எழுப்பியதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
மேற்படி ஆர்ப்பாட்டம்  நடைபெற்ற வவுனியா கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற எமது செய்தியாளர், காணாமற் போனோரின் உறவினர்கள் சிலரோடு உரையாடியபோது அவர்கள் விரக்தியடைந்த நிலையில் சில விபரங்களைத் தெரிவித்தார்களாம்.

அண்மையில் எரிக்கப்பட்டதற்கு திரு சத்தியலிங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்த அதே வேளை,  காணாமற்போனோரின் உறவினர்களை “விசமிகள்” என்றும் திட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த காணமற் போனோரின் உறவினர்கள் அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பி சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பின்னர் அங்கிருந்து களைந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.