வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக 32 துவிசக்கரவண்டிகள் அன்பளிப்ப

பிரித்தானிய தொண்டு நிறுவனமான PATH TO THE FUTURE (எதிர்காலத்திற்கான பாதை) அமைப்பினால் முல்லை மாவட்டத்தில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக 32 துவிசக்கரவண்டிகள் அன்பளிப்ப

இன் நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திய வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சழூக கல்வி சேவை பிரிவு பொறுப்பாளர்  த.நவீந்திரன்  தனது உரையில் தெரிவிக்கையில்

பெரிதும் யுத்தத்தினால் பாதிக்கபட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் கணவனை இழந்து தவிக்கும் 6000 க்கும் மேற்பட்ட விதவைகளை கொண்ட அமைப்பான அமரா பெண் தலைமை தாங்கும் ஒன்றியத்தில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயளர் பிரிவுக்குட்பட்ட அமரா பெண் தலைமைதாங்கும் ஒன்றியத்தில் இருந்து தேர்வு செய்யபட்ட பயனாளிகளின் 32 பிள்ளைகளுக்கு பிரித்தானிய தொண்டு நிறுவனமான PATH TO THE FUTURE (எதிர்காலத்திற்கான பாதை) அமைப்பினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக 32 துவிசக்கரவண்டிகள் இன்று வள்ளிபுரம் பகுதியில்; உள்ள இனிய வாழ்வு இல்லத்தில் வைத்து அவர்களிடம் ஒப்படைக்கபட்டன.

கடந்தகால கொடிய யுத்தத்தினால் தங்களது கணவன்மாரை இழந்து வாழ்வாதாரத்திற்க்காக சிரமபட்டுக் கொண்டிருக்கும் தாங்கள் தமது பிள்ளைகளின் கல்வியை தொடர்வதற்க்கு துவிசக்கரவண்டிகள் இல்லாது தாங்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருவதாகவும் தங்களிற்க்க துவிசக்கரவண்டிகள் வாங்குவதற்க்கு பொருளாதார கஸ்டம் உள்ளதாகவும் எமக்கு தெரிவத்ததை தொடர்ந்து முதற்கட்டமாக லண்டன் ஓம் சரவணபாபா சேவா அற்கட்டளை நிதியத்தினால் கடந்த மாதம் 37 துவிசக்கரவண்டிகள் வழங்கபட்டதை தொடர்ந்து இன்று எனும் பிரித்தானிய தொண்டு நிறுவனம் PATH TO THE FUTURE 32 துவிசக்கரவண்டிகளை வழங்கி வைத்துள்ளதுடன் எதிர் காலத்திலும் இவ் அமைப்பு எதிர்காலத்தில் யுத்தத்தால் பாதிக்கபட்டு கல்வி கற்க்கும் மாணவர்களுக்கு உள்ள இடர்களை களைய முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது பணியை முன்னேடுக்கவுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கபட்டு அம் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் கொண்டு தனது செயற்பாட்டில் பெரும் பகுதியை காலத்தின் தேவை கருதி இப் பிரதேசங்களில் செய்ய முன் வந்துள்ள பிரித்தானிய தொண்டு நிறுவனமான Pயுவுர் வுழு வுர்நு குருவுருசுநு  சேவை பாராட்டதக்கதுடன் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொண்டார்

path-to-future-letter