Go to ...
Canada Uthayan Tamil Weekly
* தேர்தல் வெற்றிக்காக காங்., எந்த எல்லைக்கும் செல்லும்: தேவகவுடா    * சீக்கிய இளைஞர்களுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பயிற்சி அளிக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்    * 'தவறு நடந்தது உண்மை தான்': மவுனம் கலைத்தார் பேஸ்புக் நிறுவனர்    * இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்    * கனிஷ்க் கோல்ட் பிரைவேட் லமிட்டெட் என்ற சென்னை நகைக் கடை அதிபர் சுமார் 824 கோடி ரூபாய் கடன்: சி.பி.ஐ. சோதனை
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, March 23, 2018

வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்த பின்னர் தமிழ்த் தலைமைகளால் எதைப்பற்றி பேச முடியும்?


புpரிவினை இல்லாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதையே தான் விரும்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் பேசியதை நாம் வரவேற்கின்றோம். சுpங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள மக்களும் திரு சம்பந்தன் அவர்களது கூற்றை வரவேற்றிருப்பார்கள் என்பதை நாம் உணர்கின்றோம்.

இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் மோசமான அளவில் இனவாதம் இருக்கவில்லை. ஏன்று சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள அரசியல்டி தலைவர்களும் தங்கள் வர்க்க இலாபங்கள் கருதி இனங்களுக்கு இடையில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் சதியை அறிமுகம் செய்து அதன் மூலம் நாட்டுக்கு அநியாயத்தை ஏற்படுத்தி அதே வேளை மக்களையும் பிரித்தாளும் தந்திரத்தை பின்பற்றத் தொடங்கினார்களோ, அன்று தொடக்கம் நாட்டில் இனவெறியும் துவேசமும் தலைதுர்க்கத் தொடங்கின.

இடதுசாரிகளும் அவர்களது கட்சிகளும் நாட்டில் இயங்கியபோது இன ஐக்கியம் ஒருவகையில் காப்பாற்றப்பட்டது என்று நாம் கூறலாம். ஆனால் உலகளவில் கொம்யூனிசமும் இடதுசாரிகளும் அவர்களின் கட்சிகளும் செயலற்றுப் போனதன் பி;ன்னர் தான் இலங்கையில் இனப்பிரச்சனை அதிகரித்துச் சென்றது. ஓரவராலும் கட்டுப்படுத்த முடியாமல் இனவாதம் பல அநியாயங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. புல உயிர்கள் பறிபோயின. இனவாதிகளும் மதவாதிகளும் பாராளுமன்றக் கதிரைகளில் அமர்ந்த வண்ணம் இனவாத்தை கக்கிய வண்ணம் இருந்தனர்.

தற்போது, நாட்டில் நல்லெண்ண அரசாங்கம் ஆட்சியை நடத்துகின்றது என்பதை பத்திரிகைகள் வாயிலாக அறிகின்றோம்.ஆனால் உண்மையில் மக்கள் அதனை; நன்மைகளை அனுபவிக்கின்றார்களா என்பது கேள்வியாகவே உள்ளது. ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான நல்லெண்ண அரசாங்கமும்; எதிர்க்கட்சியாக உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பும்; நல்லெணணத்தைப் பேணும் வகையிலயே நடந்து கொள்கின்றார்கள்.அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தன் அவர்களும் இசைவான முறையில் நடந்து கொள்கின்றார்கள். ஆரசாங்கம் மேற்கொள்ளம் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியவண்ணமே உள்ளது.

ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பார்வைக்கு உட்பட்ட வகையில் பல பாதகமான விடயங்களும் தற்போதைய நல்லெண்ண அரசாங்கத்தில் இடம்பெறுகின்றன. முக்கியமாக காணமற் போன தங்கள் உறவுகளைத் தேடியவண்ணம் மிகுந்த வலிகளுடன் நாட்களைக் கடந்து செல்லும் அவர்களின் பெற்றோர் அல்லது சகோதர சகோதரிகள், உறவினர்கள் ஆகியோரின் வேண்டுகொள்களை அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் உதாசீனம் செய்தன. இதனால் தமிழ் மக்கள் மிகுந்த வலிகளுடனேயே வாழ்வதற்கு பழகிக்கொண்டனர் தங்கள் சொந்த நிலங்களில் வாழும் உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதற்காக போராடிய தமிழ் மக்களி;ன் கோரிக்கைகளை அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மறுதலித்து விட்டன.

இது இவ்வாறிருக்க, கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் தம்pழ் மக்களுக்;கு பாதகமான சில நடவடிக்கைகளை கண்டும் காணதது போலவே தமி;ழ்த தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றது. pருக்கோணேஸ்வரம் ஆலயம் பறிபோகும் நிலை தோன்றியுள்ளது என்பது திருகோணமலையை வாழும் இடமாகக்கொண்ட சம்பந்தன் ஐயா அறிந்திருக்க வேண்டிய கட்டாயமான ஒரு விடயமே ஆகம். திருகோணமiலையின் ஆயர் நோயல் இம்மானுவல் ஆண்டகை இந்த கோணேஸ்வரம் ஆலயம் அபகரிப்;பு தொடர்பாக பகிரங்கமாக கருத்துக்களை பகிர்ந்து கொணடுள்ளார. குன்னியா வெந்நீர் ஊற்றுள்ள பகுதிகள் 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விடும் யோசனை ஒன்று தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நிலைமை தோன்றியுள்ளது என்கின்றார் திருகோணமiலையின் ஆயர் நோயல் இம்மானுவல் ஆண்டகை. அவர் தொடர்ந்து பேசுகையில் நாங்கள் தெரிவு செய்து அனுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களோ அன்றி மாகாண சபை உறுப்பினர்களோ தங்களுக்கு வாக்களித்த உரிமைகளுக்காக பேசுகின்றார்களா என்றும் வினாவெழுப்பியுள்ளார். அத்துடன் திருக்கோணேஸ்வரம் பறிபோனதன் பின்னர் அரசியல் யாப்பு திருத்தம் குறித்து எமது தமிழ்த் தலைவர்கள் பேசுவார்களா என்று திருகோணமலை ஆயர் கருத்துக் கூறியுள்ளமையை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2