வடக்கு மாகாண சபையோடு ஒத்துழைத்து எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புலம் பெயர் உறவுகள் முன்வரவேண்டும்

கனடா உதயன் பிரதம ஆசிரியரிடம் மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் வேண்கோள்

எமது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் புலம் பெயர் உறவுகளோடு எப்போதும் கைகோர்த்து நிற்பவர். பல நாடுகளுக்கு விஜயம் செய்து எமது மக்களின் இடர்களை நீக்கும் வகையில் உதவிகளைப் பெற்று பல திட்டங்களை அறிமுகம் செய்தவர். எனவே வடக்கு மாகாண சபையோடு ஒத்துழைத்து எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புலம் பெயர் உறவுகள் தொடர்ந்து முன்வரவேண்டும்.
இவ்வாறு வடக்கு மாகாண விவசாய மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு பொ. ஐங்கரநேசன் கடந்த செவ்வாயன்று யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் தன்னை நட்பின் நிமித்தம் சந்தித்த கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். ஏன். லோகேந்திரலிங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்
இங்கே காணப்படும் படத்தில் திரு லோகேந்திரலிங்கம் அமைச்சருக்கு கனடா உதயன் வெளியீடான “இதுவரை” நூலை கையளிப்பதையும் அருகில் இலங்கையின் சிரேஸ்ட பத்திரிகையாளர்களில் ஒருவரான திரு வீ.தேவராஜ் மற்றும் பேர்லின் நகரில் வாழ்ந்து வரும் திரு தேவதாஸ் ஆகியோர் நிற்பதைக் காணலாம்.   (படம்:- சத்தியன்)
பிறிமா டான்ஸ் அக்கடமியின் புதிய பயிற்சிக் கலையகம் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது
கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் பிறிமா டான்ஸ் அக்கடமியின் புதிய பயிற்சிக் கலையகம் மார்க்கம்- பின்ச் சந்திப்புக் அருகில் அமைந்துள்ள கட்டடத்தில் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற மேற்படி திறப்பு விழாவில் பல பிரமுகர்கள் கலந்;து கொண்டு நிறுவனத்தின் அதிபர் திரு தயா(சிவா) அவர்களையும் அவரது பாரியாரையும் வாழ்த்திச் சென்றனர். இங்கே காணப்படும் படத்தில் ஒன்றாரியோ மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சி உறுப்பினர் திரு றேமன்ட் சோ மற்றும் பிறிமா டான்ஸ் அக்கடமியின் அதிபர், அவரது பாரியார் மற்றும் புதல்விகள், மற்றும் வர்த்தக நண்பர்கள் ஆகியோர் மகிழ்ச்சியுடன் நிற்பதைக் காணலாம். வாழ்த்த விரும்புவோர் 647 926 9031 என்னும் இலக்கத்தை அழைக்கவும்.   (படம்:- இகுருவி ஐயா)