Go to ...
Canada Uthayan Tamil Weekly
ஜாலியன் வாலாபாக் சம்பவம் வெட்கக்கேடு: பிரிட்டன்    * டிரம்ப்பிற்கு ஐ.எஸ்., அல்கொய்தா எச்சரிக்கை    * குஜராத் சட்டசபை தேர்தல்: ”சங்கல்ப பத்ரா 2017 “ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அருண் ஜெட்லி    * குஜராத் சட்டசபை தேர்தல்: ”சங்கல்ப பத்ரா 2017 “ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அருண் ஜெட்லி    * பாபர் மசூதி இடிப்பின் எதிர்வினையாக பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்கள்
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Monday, December 11, 2017

வடக்கு மாகாண சபையை மட்டுமல்ல கிழக்கையும் கூட தமிழரசுக் கட்சியிடமிருந்து காப்பாற்ற வேண்டும்


வடக்கு மாகாண சபையின் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களின் அடிபணியாத போக்கினால் தங்கள்; “தந்திர” வேலைகளைச் செய்ய முடியாத சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றவர்களின் “சதி” அரசியல் யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் செய்த அமைச்சர் குருகுலராஜாவை இராஜினாமாச் செய்யும்படி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்த சில நிமிடத்தில் அவர் சிவிகே சிவஞானம் அவர்களோடு சேர்ந்து ஒன்றாகச் சென்று விக்கினேஸ்வரன் அவர்களுக்கு எதிராக ஆளுனரிடம் மனுக் கொடுத்தார்கள்.
இவ்வாறு சீரற்ற அரசியல் நிலை தோன்றி தடுமாறும் யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் பல சேர்ந்து கூட்டாக இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வலுவிலக்கச் செய்துஇ ஏனைய கட்சிகளை புறக்கணித்துஇ தமிழரசுக் கட்சியின் கைகளில் வடக்கு மாகாண சபையை ஆக்கிரமிக்க சம்பந்தன்;இ சுமந்திரன் கூட்டாகச் செய்யும் சதி இப்போது சந்திக்கு வந்துள்ளது. இதனால் ரெலோ கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் முதலமைச்சருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருவதை நாம் அவதானிக்கலாம். இந்த போக்கானது தமிழ் மக்கள் மத்தியில் பல பிரிவுகளை ஏற்படுத்தி வடக்கு தொடக்கம் வன்னி மற்றும் கிழக்கு மாகாணம் வரை நீண்டு கொண்டே போகின்றது. இந்தச் செயலுக்கு கூட தமிழரசுக் கட்சியே பொறுப்பேற்க வேண்டும்.
சம்பந்தன் அவர்கள் மிகுந்த அரசியல் சாணக்கியம் நிறைந்தவர்கள் என்பதை பலர் சொல்லக் கேட்டுள்ளோம். ஆனால் தெனனிலங்கையில் அவரின் “சாணககியம்” “வேலை” செய்யாத காரணத்தால் தமிழ் மக்களுக்கு விடிவே கிட்டவில்லை. ஆனால் வடக்கு மாகாண சபையைப் பொறுத்தளவில் அதனை தமிழரசுக் கட்சியின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர எண்ணும் சம்பந்தன் அவர்களின் சாணக்கியம் வெற்றி பெற எடுத்த முயற்சியே தற்போதைய வடக்கு மாகாண சபையில் தோன்றியுள்ள பாதிப்புக்கள்.
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக மாண்புமிகு விக்னேஸ்வரன் அவர்களை தொடர்ந்து தக்கவைக்க அனைத்து தரப்பினரும் முயற்சி எடுக்க வேண்டும். அவர் பதவி பறிக்கப்பட்டால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வடக்கிலிருந்து “பாயும்” எதிர்ப்புக் குரல் அற்றுப் போய் விடும்
வடக்கு மாகண சபைக்கு புதிய முதலமைச்சராக அவைத் தலைவர் சிவிகே சிவஞானத்தை கொண்டு வர முயலும் முயற்சியை தமிழரசுக் கட்சி கைவிடவேண்டும். இதற்காகவே வடக்கில் பொதுமக்களும் இளைஞர்களும் தமிழ் மக்கள் பேரவையும் போராடுகின்றார்கள்.
என்ன நடந்தாலும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் சொத்து. அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சர். அவரை தக்க வைப்பதே தற்போது வடக்கு மாகாண மககளுக்கும் அங்குள்ள பொது அமைப்புகளுக்கும் உள்ள ஒரு பாரிய பொறுப்பு. முதலமைச்சர் விக்கினேஸ்வரனை நீக்கிவிட்டு சம்பந்தன் போன்று அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆடும் ஒரு முதலமைச்சரை நியமித்தால் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் செல்லும் போது அரசாங்கத்திற்கு ஆதரவான கருத்துக்களே புதிய முதல்வரால் பகிரப்படும். இந்த விடயத்தில் அரசாங்கத்தோடு சேர்ந்து தமிழரசுக் கட்சி வடக்கில் தனது கையை ஓங்கச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. எனவே இந்த விடயங்களை மனதில் நிறுத்தி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க அனைவரும் போராட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2