வடக்கின் புதிய ஆளுநராக் லோகேஸ்வரன் நியமிக்கப்படுவார் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்த்ததா??

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என கொழும்பிலிருந்து கிடைத்த செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் றெஜினோல்ட் கூரேயே நீடிப்பார் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். எட்டு மாகாணங்களின் ஆளுநர்களுக்கு, விருப்ப அடிப்படையில், இடமாற்றங்களை வழங்க அரசு திட்டமிட்டது. இந்த மாற்றங்களுக்கமைய, மேல் மாகாண ஆளுநர், கே.சி.லோகேஸ்வரன், வடமாகாண ஆளுநராக மாற்றம் பெறவிருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 9 மாகாணங்களின் ஆளுநர்களையும் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன கடந்த செவ்வாய் கிழமையன்று சந்தித்தார். இதன்போதுவடக்குமாகாணஆளுநராகறெஜினோல்ட் கூரே அங்கு தொடர்ந்து பணியாற்றி விருப்பம் தெரிவித்ததால் அவரே வடக்கு மாகாண ஆளனராக நீடிப்பார் என ஜனாதிபதியினால் உறுதிப்படுத்தப்பட்டது என மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.